கர்ணன் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்!

சென்னை: தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

கடும் போட்டிக்கு நடுவில் கர்ணன் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பிரபல OTT நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

படக்குழு முதற்கட்டமாக இதுவரையில் 3 பாடல்களை வெளியிட்டுள்ளது. கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி, தட்டான் தட்டான் என இதுவரை வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமன்றி
யூ டியூப்பிலும் வைரலானது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இப்படத்தின் டீசரை நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த ஆண்டில் மிக எதிர்பார்ப்பில் உள்ள படமாக கர்ணன் திரைப்படம் ஒரு புறம் இருக்க, படத்தின் டீசரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Netflix வெளியீடு

Netflix வெளியீடு

இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள ஜகமே தந்திரம் படத்தை நேரடியாக OTT யில் வெளியிடும் உரிமையை Netflix OTT தளம் பெரிய விலைக்கு கைப்பற்றியது. கர்ணன் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றவும் முயற்சித்துள்ளது.

தொடர்ந்து பெரிய படங்கள்

தொடர்ந்து பெரிய படங்கள்


Netflix உடனான கடும் போட்டிக்கு பிறகு கர்ணன் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை Amazon Prime கைப்பற்றியுள்ளது. சூரரை போற்று, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அடுத்த பெரிய படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியுள்ளது Amazon Prime.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X