விஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா?
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவது குறித்து தல ரசிகர்கள் வைத்த கோரிக்கைகள் வீணாகிவிட்டது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் அதை வெளியிட திட்டமிட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா என்று அந்நிறுவனம் கேட்டதற்கு தற்போது வேண்டாம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்னும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடும் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடக் கூடாது என்றார்கள் அவர்கள். இந்நிலையில் விஸ்வாசம் படம் வரும் 25ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இது நிச்சயம் தல ரசிகர்களை கவலை அடைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது அதற்கு பெரிய பலமாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











