Don't Miss!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- News
"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஓடிடியில் இருந்து திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் அமேசான் ப்ரைம்…100 கோடி பட்ஜெட்டில் மெகா ப்ளான்
வாஷிங்டன்: திரையுலகில் கடந்த மூன்று வருடங்களாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலங்களில் தியேட்டர்கள் செயல்படாமல் போனதால், உலகம் முழுவதும் ஓடிடி பயனாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.
இதனால், எதிர்காலத்தில் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேசான் ப்ரைம் நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது.
காந்தாரா
ஓடிடி
அப்டேட்:
ரசிகர்களுக்கு
காத்திருக்கும்
விருந்து…
அமேசான்
கொடுத்த
சர்ப்ரைஸ்

ஓடிடி தளங்களின் வளர்ச்சி
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பலவிதமான சினிமா ரசிகர்கள் இருந்தாலும் அவர்களின் புகலிடம் தியேட்டர்கள் தான். சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட், வித்தியாசமான ஜானர்கள் என எப்படி இருந்தாலும், திரையரங்குகளில் சென்று பார்ப்பதை தான் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்புவார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கின் போது வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு மிகப் பெரிய வடிகாலாக அமைந்தது ஓடிடி தளங்கள் தான். அதுவரை இந்தியாவில் அதிகம் அறியப்பட்டாமல் இருந்த ஓடிடி தளங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஓடிடி துறையில் நிகழ்ந்திருக்க வேண்டிய மாற்றங்கள், கொரோனா ஊரடங்கில் சாத்தியமானது.

கேள்விக்குறியான திரையரங்குகளில் நிலை?
கொரோனாவுக்கு முன்பே வெளியீட்டுக்கு தயாராக இருந்த சில படங்கள், வேறு வழியில்லாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸானது. முக்கியமாக சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம், ரஞ்சித் இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' என பல படங்கள் இந்த வரிசையில் இடம்பெறும். நேரடியாக ஓடிடியில் வெளியான படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இனி தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஏற்கனவே டிக்கெட் விலை அதிகரிப்பு, பார்க்கிங் கட்டணம் என பல பஞ்சாயத்துகள் இருந்தன. மேலும், திரையரங்குகள் கிடைக்காத சில சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் கை கொடுத்தன.

ரசிகர்களின் தீர்ப்பு இதுதான்
ஓடிடி என்ற ஒற்றைச் சொல் ஒட்டுமொத்த திரையுலகுக்கும் வரம் எனவும் சாபம் என்றும் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் எப்போதும் தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் திரையரங்குகளில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம், பொன்னியின் செல்வன், டான், திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற தமிழ்ப் படங்களும், இந்தியளவில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களையும் உதாரணமாகக் கூறலாம். சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல படங்களை ரசிகர்கள் ஜெயிக்க வைத்தார்கள் என்பதே உண்மை. இந்த மாதம் வெளியான 'லவ்டுடே' திரைப்படம் இதற்கு உதாரணமாக உள்ளது.

அமேசான் ப்ரைம் எடுத்த புதிய முடிவு
அதேநேரம், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், சோனி லிவ் போன்ற ஓடிடி தளங்கள், படங்கள், வெப் சீரிஸ்களை சொந்தமாக தயாரிக்கத் தொடங்கின. ஆனால், இவையெல்லாம் நேரடியாக அந்தந்த ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியாகி வருகிறது. ஆனால், அமேசான் ப்ரைம் நிறுவனம் முதன்முறையாக திரையரங்குகளுக்கான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 100 கோடி பட்ஜெட்டில் 10 முதல் 15 படங்களை தயாரிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படங்கள், அதன்பின்னர் அமேசான் ப்ரைமில் ஸ்டிரீமிங் ஆகும் எனக் கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் போட்டியை சமாளிக்க
உலகளவில் அமேசான், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்கள் தான் அதிகமான சப்ஸ்கிரைபர்களோடு முன்னணியில் இருக்கின்றன. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 100 படங்கள் வரை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்தப் போட்டியை சமாளிக்கும் விதமாக அமேசான் நிறுவனம், தான் தயாரிக்கும் படங்களை திரையரங்குகளில் வெளியிடவும் அதிரடியாக முடிவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் அமேசான், அதன்பின்னர் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாம். இதற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஓடிடி ரசிகர்கள் மகிழ்ச்சி
இன்றைய தினம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு, ஓடிடி ரைட்ஸ் பிசினஸ் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தியேட்டர்களில் வெளியாகி ரிசல்ட் தெரியும் முன்பே, ஓடிடி ரைட்ஸுக்கு விலை பேசி முடிவாகி விடுகிறது. இந்நிலையில், அமேசான் ப்ரைம் நேரடியாக திரையரங்குகளுக்காகவே படங்கள் தயாரிக்கவுள்ளது, பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என தெரிகிறது. அதேபோல், Paramount Pictures, MGM போன்ற முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் போல எதிர்காலத்தில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அமேசான் ப்ரைமின் இந்த முயற்சி எந்தளவு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம் ஓடிடி தளங்களால் தியேட்டர் ஆடியன்ஸ் குறைந்துவிடுவார்கள் என்ற வாதமும் பொய்யாகியுள்ளதாக, சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.