'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்
சென்னை: விஸ்வாசம் குறித்து அமேசான் பிரைம் வெளியிட்ட ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வாசம் படம் தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம் ஒரு ட்வீட் போட்டது.
அமேசான் பிரைம்
விஸ்வாசம் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா என்று அமேசான் பிரைம் வீடியோ ட்வீட் செய்தது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.
மே 1
விஸ்வாசம் படம் இன்னும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு வெளியிட வேண்டாம் மே 1ம் தேதி வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள்
விஸ்வாசம் படத்தை தற்போதே அமேசான் பிரைமில் வெளியிட வேண்டாம் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தல
96 படத்திற்கு நடந்த கொடுமை விஸ்வாசத்திற்கு நடக்க வேண்டாம். கொஞ்சம் காத்திருங்கள் என்கிறார்கள் தல ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











