அமேசான் பிரைமில் தெலுங்கு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான மாதாவின் டிஜிட்டல் பிரீமியர் அறிவிப்பு!
சென்னை: தெலுங்கில் அண்மையில் வெளியான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான மாதாவின் டிஜிட்டல் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் வெளியான திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக் மூலம் கட்டணமில்லா இசை கேட்பது, வரம்பற்ற வாசிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மாதத்திற்கு 129 ரூபாய் கட்டணத்தில் வழங்கி வருகிறது.

சமீபத்தில் வெளியான தெலுங்கு படமான மாதாவின் டிஜிட்டல் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ நேற்று அறிவித்தது. அறிமுக இயக்குநர் ஸ்ரீவித்யா பசாவா இயக்கியுள்ள மாதா திரைப்படம், ஒரு பெண்ணை மையப்படுத்தப்பட்ட உளவியல் த்ரில்லர் படமாகும். இந்தப் படம் ப்ரூஃப் ரீடர் நிஷாவைச் சுற்றி வருகிறது.
குறைந்த திரையரங்குகளில் ஓடிய போதும் இந்த படம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 200 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பிரைம் உறுப்பினர்கள், த்ரிஷ்ணா முகர்ஜி, ராகுல் வெங்கட், அனிஷ் குருவில்லா நடித்த இப்படத்தை காணலாம்.
இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குநரான ஸ்ரீவித்யா பசாவா, கொரோனாவால் தியேட்டர்களில் குறைந்த நாட்களே ஓடினாலும் பார்வையாளர்களிடம் இருந்து ஒரு அற்புதமான பதிலைப் பெற்றுள்ளோம். திறமையான நடிகர்களுடன் வேலை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தங்களின் தனிப்பட்ட சாதனங்களிலிருந்து பிரைம் வீடியோவில் இருந்து மாதா படத்தை ரசிக்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதேபோல் படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ள த்ரிஷ்னா முகர்ஜி பேசுகையில் "மாதா படம் வெளியானவுடன் அதனை பார்க்க பார்வையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! ஒரு மர்மமான த்ரில்லரில் திறமையான நடிகர்களுடனும், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீவித்யா பசாவாவுடனும் பணியாற்றுவது ஒரு முழுமையான மகிழ்ச்சி. தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் காரணமாக எங்கள் படத்தின் தியேட்டர் காட்சிகள் குறைக்கப்பட வேண்டியிருந்தது, ஆனால் அமேசான் பிரைம் வீடியோவில் மாதா டிஜிட்டல் ரிலிஸாவதால் பார்வையாளர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பாக பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications