பீப் வசனங்களுடன்.. அமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்.. டிரைலர் இதோ!

சென்னை: மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் தான் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஜன., 29) ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது மாஸ்டர்.

குடியரசு தினம் வரை தியேட்டர்களில் கூட்டத்துக்கு குறையில்லாமல் ஓடிவந்த மாஸ்டர் திரைப்படத்தை திடீரென அமேசான் பிரைமில் வெளியிடுவது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

200 கோடிக்கு மேல்

200 கோடிக்கு மேல்

பொங்கல் ரிலீசாக தியேட்டர்களில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2 வாரங்களில் 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குடியரசு தின விடுமுறையன்றும் அரங்கு நிறைந்த காட்சியாகவே மாஸ்டர் திரைப்படம் வெற்றி நடை பெற்றது.

நாளை மறுநாள்

நாளை மறுநாள்

அடுத்த மாதம் பிப்ரவரி 12ம் தேதி மாஸ்டர் திரைப்படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அமேசான் பிரைம் தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் டிரைலரும் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் ஜனவரி 29ம் தேதியே அவசர அவசரமாக அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியாகிறது.

தியேட்டருக்கு முன்பே

தியேட்டருக்கு முன்பே

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை போலவே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தையும் கடந்த ஆண்டே அமேசான் பிரைம் வாங்கி விட்டது. ஆனால், தியேட்டரில் தான் படத்தை முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என விஜய் விடுத்த கோரிக்கை காரணமாகவே முதலில் படத்தை தியேட்டரில் வெளியிட்டதாகவும், தியேட்டரில் வசூல் மழை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே குவிந்து விட்டதால், 16 நாட்களிலேயே அக்ரிமென்ட் படி மாஸ்டரை அமேசானில் வெளியிடுகின்றனர்.

பீப் வசனங்களுடன்

அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த அறிவிப்புடன் மாஸ்டர் படத்தின் மொத்த காட்சிகள் அடங்கிய டிரைலரையும் அமேசான் பிரைம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த டிரைலர் இறுதியில் விஜய் பேசும் பீப் வசனமும் இடம்பெற்றுள்ளது. ஒடிடி தளங்களுக்கு சென்சார் இன்னும் இல்லாத காரணத்தால், அன்கட் வெர்ஷனாக மாஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா சீன்கள்

எக்ஸ்ட்ரா சீன்கள்

வசனங்களை போலவே எக்ஸ்ட்ரா சீன்களும் மாஸ்டர் அன்கட் வெர்ஷனில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும், அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானால், தியேட்டரில் பார்த்தவர்களும் மீண்டும் படத்தை பார்க்க வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சூரரைப் போற்று ஸ்ட்ரீமிங்கை மாஸ்டர் வீழ்த்துமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X