Vinayagar Chaturthi 2024: அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தியில் பிரபலங்கள்.. யாரு யாருனு தெரியுமா?
மும்பை: விநாயகர் சதுர்த்தி இந்துகளின் வழிபாட்டில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவ்வகையில் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி நேற்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சிறிய அளவிலான விநாயகர் தொடங்கி ராட்சத அளவிலான விநாயகர் சிலைகளை மக்கள் வைத்து வழிபட்டு, நேற்று அதனை அவர்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்தனர். ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. அந்த நாளே விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் நேற்று இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. அந்த நாளே விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் இந்துக்கள் இந்த பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதியரான, ஆனந்த் அம்பானி மற்றிம் ராதிகா மெர்சண்ட்க்கு திருமணத்திற்கு பின்னர் வரும் முதல் விநாயகர் சதுர்த்தி விழா என்பதால், வழக்கத்தை விடவும் கோலாகலமாக அம்பானி குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர். இதற்கான பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் முக்கிய விஐபிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே தனது வீட்டில் விநாயகர் சிலை வைத்து அதனை வழிபட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுப்பது என்பது அம்பானியின் பழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் பல நட்சத்திரங்களை அழைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மும்பை அண்டிலியாவில் உள்ள அம்பானியின் வீடு பல அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் விழாவில் கலந்து கொள்பவர்களுக்காக பல்வேறு வகையான உணவுகளும் தயார் செய்யப்பட்டது. புதுமண தம்பதிகளான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டுடன் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீட்டா அம்பானியும் விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர் .

பிரபலங்கள்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் விநாயகர் சதுர்த்தி விழாவில், அனில் கபூர், ஜாக்கி ஷெரஃப், கரீனா கபூர்- சாயீஃப் அலி கான், சுனில் ஷெட்டி, அனன்யா பாண்டே, கரன் ஜோகர், சாரா அலிகான், மாதுரி தீக்ஷித், கியாரா அத்வானி, தமன்னா, அட்லீ, ப்ரியா அட்லீ, சல்மான் கான், காஜல் அகர்வால், கஜோல், சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டனர். வழிபாடு முடிந்த பின்னர், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரமாண்டமான விருந்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


Click it and Unblock the Notifications











