Ambani Shankar: குஷி விஜய் போல.. அப்படியொரு செயலை செய்த அம்பானி சங்கர்.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: காமெடி நடிகர் அம்பானி சங்கர் குஷி படத்தில் விஜய் குதித்ததை போலவே பல அடி உயரத்தில் இருந்து குதித்து தனது மறக்க முடியாத தருணத்தை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
நடிகர் அஜித் நடித்த ஜி திரைப்படத்தின் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் சங்கர். ஆனால், ஜி சங்கர் ஆவதற்கு பதிலாக அடுத்து இவர் கருணாஸ் உடன் இணைந்து நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், அம்பானியை சேர்த்துக்கொண்டு அம்பானி சங்கர் ஆகிவிட்டார்.

பல படங்களில்: சூர்யா நடித்த ஆறு, விஜயகாந்தின் பேரரசு, ரஜினிகாந்தின் குசேலன், திரௌபதி, புஷ்பா படத்திற்கு டப்பிங் என சினிமாவில் கலக்கி வருகிறார். அம்பானி சங்கர் 2012ம் ஆண்டு மோனிகா நந்தினி என்ற டிகிரி முடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 30 வயதை கடந்த இவர் சுற்றுலா பிரியராக இருந்து வரும் நிலையில், பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

வடிவேலு தான் ரோல் மாடல்: கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி இவருக்கு அடையாளமாக மாறினாலும், வைகைப்புயல் வடிவேலு தான் தனது ரோல் மாடல் என்றும், அவரைப் போல காமெடியில் ஒரு சிறந்த நடிகராக வரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருக்கிறேன் என இவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். சினிமா, சீரியல்கள் என நடித்து வரும் இவருக்கு சமீப காலமாக பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் டப்பிங் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
குஷி விஜய்யை போல: சமீபத்தில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற அம்பானி சங்கர் அங்கே bungee jumping செய்த மறக்க முடியாத வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தில் முதல் பாடல் காட்சியில் நடிகர் விஜய் இதே போல ரிஸ்க் எடுத்து ஜம்ப் பண்ணியிருப்பார்.
அம்பானி சங்கர் சாகசம்: பல பிரபலங்கள் இதை செய்ய முயற்சித்து வரும் நிலையில், அம்பானி சங்கர் போன்ற சிலர் சாதித்துள்ளனர். குடல் எல்லாம் வாய்க்கே வந்து விடும் போன்ற அளவுக்கு மரண பீதியை கிளப்பினாலும் வீடியோவில் செம கூலாக அந்தரத்தில் அத்தனை அடி உயரத்தில் தொங்கிக் கொண்டே அம்பானி சங்கர் கொடுக்கும் ரியாக்ஷன் செம சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











