Don't Miss!
- News
இந்திக்கு எதிரான போராட்டம் தொடரும்.. பிற மொழிகளை அழிக்க பாஜக முயற்சி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அதிகமா சாப்பிடுறாங்களா? அப்ப இந்த அறிகுறிகள கண்டிப்பா நீங்க கவனிக்கணுமாம்!
- Finance
இது அதிர்ச்சியளிக்கிறது..FPO-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி.. அதானி குழுமம் பரபர கருத்து!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற நடிகர் அம்பானி சங்கர்!
Recommended Video

மதுரை : தமிழ் சினிமாவில் உயரம் குறைவான நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் லேட்டஸ்டாக கலக்கிக் கொண்டிருப்பவர் அம்பானி சங்கர்.
'ஜி', 'ஆறு', 'வல்லவன்', 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 'குசேலன்', 'பட்டத்து யானை' உள்பட 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அம்பானி சங்கர்
உயரம் குறைந்த நடிகரான சங்கர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்ததால் அம்பானி சங்கர் என்று அழைக்கப்படுகிறார்.

பாரா பேட்மின்டன் லீக்
அம்பானி சங்கர், மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த மாநில பாரா பேட்மின்டன் போட்டியில் உயரம் குறைந்தவர்களுக்கான பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

பேட்மின்டன் போட்டியில் அம்பானி சங்கர்
இதில் அவர் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் அருண் சுயம்பு என்பவருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அம்பானி சங்கர் அணி வெற்றி பெற்றது. இதில் அம்பானி சங்கருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஒற்றையர் பிரிவில்
உயரம் குறைந்தவர்களுக்கான பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் அம்பானி சங்கர். வெற்றிக்குப் பிறகு அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார் அம்பானி சங்கர்.