ரஜினி ஆலோசனைப்படி சிங்கப்பூர் மருத்துவமனையில் அம்பரீஷுக்கு சிகிச்சை!
பெங்களூர்: ரஜினியின் ஆலோசனைப்படி அவரது நெருங்கிய நண்பர் அம்பரீஷுக்கு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத்
கன்னட நடிகரும், கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சருமான அம்பரீசுக்கு சில தினங்களுக்கு முன் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னேற்றமில்லை
டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் இயல்பாக இருப்பதாக மனைவி சுமலதா கூறினாலும், நிஜத்தில் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை.

நுரையீரல் நோய்த் தொற்று
மூச்சு திணறலால் அவதிப்பட்டார். டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளித்தனர். அம்பரீஷுக்கு நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதை அகற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திரவ உணவுதான்
டியூப் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது. பெரும்பாலும் சுயநினைவற்ற நிலையிலேயே அவர் உள்ளார். எனவே மேல் சிகிச்சைக்காக அம்பரீஷ் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

ரஜினி ஆலோசனை
அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி ரஜினிகாந்த் ஆலோசனை தெரிவித்தாராம். அதன்படி சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார். ரஜினியும், அம்பரீசும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், ரஜினியும் இதே மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications











