twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்பரீஷின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும், 3 நாட்கள் துக்கம்: கர்நாடக முதல்வர்

    By Siva
    |

    Recommended Video

    அம்பரீஷ் மரணம்: பல பேர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி

    பெங்களூர்: மறைந்த நடிகர் அம்பரீஷின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில்

    வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் கந்தீரவா ஸ்டுடியோவில் உள்ள டாக்டர் ராஜ்குமார் ஸ்மாரகா அருகே நடைபெற உள்ளது.

    Ambareesh last rites to be performed tomorrow

    அம்பரீஷின் இறுதிச் சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரின்

    மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அம்பரீஷின் குடும்பத்தார் மற்றும் திரையுலகினரிடம் கலந்தாலோசித்த பிறகே அவரின் இறுதிச் சடங்கு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    அம்பரீஷின் உடல் வைக்கப்பட்டுள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல

    சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அம்பரீஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலக பிரபலங்கள் பலர் ஸ்டேடியத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    English summary
    Karnataka CM Kumaraswamy announced that Ambareesh's last rites will be performed tomorrow near Dr Rajkumar Smaraka at Kanteerava Studio, Bengaluru, with state honours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X