சூர்யாவுக்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கே கொண்டு வந்த செல்வா: செலவு ரூ.3 சி மட்டுமே
Recommended Video

சென்னை: சூர்யா 36 படத்திற்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கே வரவழைத்துள்ளனர்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 36 என்று பெயர் வைத்துள்ளனர்.
படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க சென்னையில் செட் போட்டுள்ளனர்.

சென்னை
அம்பாசமுத்திரத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தாமல் சென்னைக்கே அம்பாசமுத்திரத்தை வரவழைத்துவிட்டனர். அம்பாசமுத்திரம் போன்றே பிரமாண்ட செட் போட்டுள்ளனர்.

செட்
வீடுகள், கோவில், மரம் செடி கொடி என்று அம்பாசமுத்திரம் போன்றே சென்னையில் செட் போட்டுள்ளனர். ரூ. 3 கோடி மதிப்புள்ள அந்த செட்டை 220 பேர் சேர்ந்து 23 நாட்களில் உருவாக்கியுள்ளனர்.

சூர்யா
அம்பாசமுத்திரம் செட்டில் இந்த வாரம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். சுமார் 20 நாட்களுக்கு அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

காரணம்
20 நாட்கள் படப்பிடிப்பில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்கிறார்களாம். அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அம்பாசமுத்திரம் சென்று படப்பிடிப்பை நடத்துவது கடினம் என்பதால் செட் போட்டுள்ளார்களாம்.

குப்பம்
சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வந்த குப்பம் கூட செட் தான். படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த செட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா படத்திற்கும் பிரமாண்ட செட் போட்டுள்ளனர். சென்னைக்கு அம்பாசமுத்திரத்தை கொண்டு வந்த பெருமை ஆர்ட் டைரக்டர் ஆர். கே. விஜய முருகனை சேரும்.


Click it and Unblock the Notifications










