Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இது சம்பாதிக்கும் வயசு, காதலில் சிக்கிடாதே: லட்சுமி மேனனுக்கு அம்பிகா அட்வைஸ்
சென்னை: இது சம்பாதிக்கும் வயது. அதனால் காதலில் சிக்கிவிடாதே என்று நடிகை லட்சுமி மேனனுக்கு அம்பிகா அறிவுரை வழங்கியுள்ளாராம்.
பழம்பெரும் நடிகை அம்பிகா ஜிகர்தண்டா படத்தில் லட்சுமி மேனனின் அம்மாவாக நடித்துள்ளார். இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார் லட்சுமி மேனன்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
அம்மா, மகள்
ஜிகர்தண்டா படப்பிடிப்பின்போது அம்பிகாவும், லட்சுமி மேனனும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்களாம். படம் தவிர்த்து நிஜத்திலும் அம்மா, மகள் போன்று பாசமாக இருக்கிறார்களாம்.
கேரளா
அம்பிகாவும் சரி, லட்சுமி மேனனும் சரி கேரளாவைச் சேர்ந்தவர்கள். சேச்சிகள் இருவரும் படப்பிடிப்பில் ஒருவர் மீது மற்றொருவர் பாசமழை பொழிந்து வருகிறார்களாம்.
அறிவுரை
இது தான் சம்பாதிக்கும் வயது உனக்கு. அதனால் தற்போது காதல் கீதல் என்று எதிலும் சிக்காமல் உஷாராக இருந்து கொள் என்று அம்பிகா லட்சுமிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
லட்சுமி
லட்சுமி மேனன் பக்கத்து வீட்டு பெண் போன்று இருந்தாலும் கோலிவுட்டின் பிசியான நாயகிகளில் அவரும் ஒருவர். கோடம்பாக்கத்திற்கு வந்த வேகத்தில் அபார வளர்ச்சி கண்டவர் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தக் காட்சி
லட்சுமி மேனன் விஷாலுடன் சேர்ந்து நடித்த பாண்டியநாடு ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடி நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது. இந்த படத்தில் லட்சுமி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளாராம்.