twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    90 சதவீத படத்தை கேமராமேன் இல்லாமலேயே எடுத்த அம்பிகா

    |

    செங்கோட்டை: புளியரையில் நடிகை அம்பிகா அவரது தங்கை ராதாவுக்கு சொந்தமான ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது.

    தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை-கொல்லம் மெயின் ரோடு புளியரையில் திரைப்பட நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சித்தலங்கரை தவசித்தர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    அதன் பிறகு அம்பிகாவும் குத்துவிளக்கேற்றினார். நடிகை அம்பிகா, ராதா குடுபத்தினருக்கு இது 17வது ஹோட்டல் ஆகும். ஏராளமான திரைப்படங்கள் நெல்லை மாவட்டத்தில் படமாக்கப்படுகிறது. குற்றாலத்தில் தங்கும் திரைப்பட துறையினரை தங்கள் ஹோட்டலில் தங்க வைத்திட இது கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    குத்து விளக்கேற்றும் சுவாமிகள்

    குத்து விளக்கேற்றும் சுவாமிகள்

    ஹோட்டல் திறப்பு விழாவில் குத்து விளக்கேற்றும் சித்தலங்கரை தவசித்தர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள்.

    தமிழில் நிழல், மலையாளத்தில் அன்பெல்லா

    தமிழில் நிழல், மலையாளத்தில் அன்பெல்லா

    எனது தம்பி சுரேஷ் மற்றும் நானும் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறோம். தமிழ் மற்றும மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமிழில் நிழல் என்றும், மலையாளத்தில் அன்பெல்லா என பெயரிட்டுள்ளோம். இப்படம் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று அம்பிகா தெரிவித்தார்.

    என் தம்பி அமெரிக்காவில் படித்தவர்

    என் தம்பி அமெரிக்காவில் படித்தவர்

    எனது சகோதரர் சுரேஷ் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பிலிம் சிட்டியில் இயக்குனர் பயிற்சி முடித்து விட்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவர் மலையாள ரீமேக் படங்களான நீலத்தாமரை, என் இஷ்டம் நின் இஷ்டம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்று அம்பிகா கூறினார்.

    புதுமையான படப்பிடிப்பு

    புதுமையான படப்பிடிப்பு

    நாங்கள் இயங்கியுள்ள முதல் படமான நிழல் ஒரு திரில் படம். இப்படத்தில் சென்ற வருடம் மிஸ் கேரளா பட்டம் வென்ற இந்து என்பவர் கதாநாயகியாகவும், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேஜர் கிஷோர் என்பவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் படம் இது. மேலும் 90 சதவீத அளவில் கேமராமேன் இல்லாமலேயே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிப்பவர்களிடமே கேமரா கொடுக்கப்பட்டு புதுமையுடன் படம் பிடித்துள்ளோம் என்றார் அம்பிகா. தென்னிந்தியாவில் பாயிண்ட் ஆப் வீயூ முறையில் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    English summary
    Actress turned director Ambika and her former actress sister Radha together opened a new hotel at Puliyarai in Tirunelveli district.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X