உன்னை காயப்படுத்தி கொள்ளாதே.. ரவி மோகனுக்கு ஆறுதல் போஸ்ட் போட்ட குஷ்பு காலத்து நடிகை
சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த வாரத்தில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தனது விவாகரத்து விவகாரம், அதற்கு முன்னரும் பின்னரும் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவங்கள் நெருக்கடிகள், மன ஓட்டங்கள், நெருக்கடிகள் உள்ளிட்டவற்றை மொத்தமாக கொட்டினார். அதுவும் கண்ணீருடன் அவர் தெரிவித்த சில விஷயங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தனது கெரியர் தொடர்பாக, தனது விவாகரத்து வழக்கு முடியும் வரை தான் சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்றும், தான் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாது என்றும் தெரிவித்தார். மேலும் தனது மகன்களை பார்க்க விட மாட்டேன் என்கிறார்கள். அவர்களிடம் போனில் கூட பேச முடியவில்லை. அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் நான் விவாகரத்து வேண்டும் என்று கேட்டேன், ஆனால் அவர்கள் இப்போது எனக்கு எதிராக சூனியம் செய்கிறார்கள், அதனால் நான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

கண்ணீர்: நான் அவர்கள் அனைவரையும் பழி வாங்கி விட்டு, நானும் போய் விடுவேன் என்று எல்லாம் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல், என் மீது அவதூறு பரப்புவதற்காகவே நான் அழகில் மயங்கி ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். 45 வயதில் அழகில் மயங்கி ஒரு பெண் பின்னால் சென்றுவிட்டேன் என்பதில் என்ன நியாயம் உள்ளது. அப்படி என்றால், எனது வேலையே அழகான பெண்களுடன் நடிப்பது தான், அப்படி அழகில் மயங்கி செல்வது என்றால் நான் எப்போதோ சென்றிருக்க வேண்டும் அல்லவா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த பிரச்னைகளுக்கு இட்லி நடிகையும் முக்கிய காரணம், அந்த நடிகைக்கு எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து சொல்ல எந்த தகுதியும் இல்லை என்று விளாசிவிட்டார்.

அம்பிகா அட்வைஸ்: இப்படி இருக்கையில் 80'ஸ் நடிகைகளில் ஒருவரான நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதாவது அவரது பதிவில், " ரவி நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாம் சரியாகிவிடும், கடவுள் உன்னைச் சோதிக்கிறார், கொஞ்சம் தாமதிக்கிறார் என்று நினைத்துக் கொள். தவறான முடிவுகளை எடுக்காதே, உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே. குழந்தைகள் மீது நீ வைத்திருக்கும் பாசமே, உனது வாழ்க்கை மீதான ப்ரியத்தை உனக்கு கொண்டு வரும். கடவுளிடம் வேண்டிக் கொள், நன்றாக தூங்கு, அப்பா, அம்மாவுடன் இரு அல்லது உன்னை நன்கு அறிந்தவர்களுடன் இரு" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications