தனுஷின் அம்பிகாபதியுடன் மோதும் பாரதிராஜாவின் அன்னக்கொடி
சென்னை: தனுஷின் அம்பிகாபதியும், பாரதிராஜாவின் அன்னக்கொடியும் வரும் 28ம் தேதி ரிலீஸாகின்றன.
தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ராஞ்ஹனா படத்தின் தமிழ் பதிப்பு தான் அம்பிகாபதி. ராஞ்ஹனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நாயகி சோனம் கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதிலும் முக்கியமாக முதன்முதலாக இந்தி பேசி நடித்துள்ள தனுஷின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

28ல் அம்பிகாபதி
அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது.

அன்னக்கொடி
புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள அன்னக்கொடிக்கும் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படமும் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கண்ணீர்விட்ட ராதா
அன்னக்கொடியில் தனது மகள் கார்த்திகாவின் நடிப்பை பார்த்த ராதா பாரதிராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











