விரைவில் வருகிறது அம்புலி 2.. இரட்டை இயக்குனர்கள் தகவல்!
சென்னை : அம்புலி பாகம் 2 விரைவில் உருவாக உள்ளதாக இயக்குனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சனம் ஷெட்டி அம்புலி படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் இயக்குனர்கள் ஹரீஸ் நாராயணன் மற்றும் ஹரி சங்கர் சனம் ஷெட்டியின் நண்பர்கள் ஆவர். தற்போது சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் பிரச்சனைகள் குறித்து தங்கள் பார்வையை இவர்கள் பகிர்ந்திருக்கின்றனர்

அம்புலி படத்தின் நாயகனான அஜய் அம்புலி படம் முடிவடைந்து சரியாக டப்பிங் ஆரம்பிக்கும் வேலையில் தற்கொலை செய்து இறந்து போனார். இதுஅந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சில ஊடகங்கள் காதல் தோல்வியால் தான் இறந்து போனார் என எழுதியிருந்தன இது தொடர்பாக பதிலளித்த இயக்குனர்கள் உண்மை இல்லை என்றே மறுத்து இருந்தனர் .
மேலும் தற்போது சனம் ஷெட்டி மீடியாவிடம் வந்து நிற்பதற்கு காரணம் உதவி கேட்கும் நோக்கமாக தான். இல்லையென்றால் இதற்கு முன் பல பிரச்சனைகள் சனத்திற்கு வந்தும் மீடியாவில் வந்து முறையிட்டதில்லை என கூறினார்கள். பல விழாக்களில் சந்திக்கும் போது கூட தர்ஷனுக்காக வாய்ப்பு கேட்டிருக்கிறார் சனம் ஷெட்டி என ஹரீஸ் நாராயணனும் ஹரி சங்கரும் கூறினார்கள் . ஹரீஸ் நாராயணன் மொத்தமாக இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து கடந்து போனால் சரியாக இருக்கும் என கருத்தை தெரிவித்தார் .
ஹரீஸ் நாரயணன் மற்றும் ஹரி சங்கர் இயக்கத்தில் உருவான அம்புலி படம் மாபெரும் வெற்றி அடைந்த படம். இந்த படத்தை தொடர்ந்து இந்த இயக்குனர்கள் சில படங்களை இயக்கி இருந்தாலும் எந்த படமும் அம்புலி பட அளவுக்கு வெற்றியை ருசித்தது இல்லை இருந்தும் சரியான வெற்றிக்காக இருவரும் போராடி வருகின்றனர் .
இவர்கள் தற்போது ஹன்சிகாவை வைத்து ஒரு பேய் படத்தை இயக்கி வருகின்றனர். இதற்கு பிறகு அம்புலி 2 படத்தை இயக்க போவதாக தகவல்களை தெரிவித்து உள்ளனர். மேலும் கதை கிட்டதட்ட முடிந்து விட்டதாகவும் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் அம்புலி பட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
ஹன்சிகா தற்போது மகா படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இதே நேரத்தில் ஹரீஸ் நாரயணன் மற்றும் ஹரி சங்கர் படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தை தர்மபிரபு படம் தயாரித்த ஶ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











