'ஆ'... அம்புலி டீமின் அடுத்த ஹாரர்!

By Shankar

அம்புலி என்ற திகில் படத்தை 3டியில் தந்த குழு, அடுத்து தரும் ஹாரர் படம், ஆ.

உலக தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில், ஆவி உலகை பற்றிய படங்கள் வருவது அரிதுதான்.

Ambuli teams next horror Aa

அம்புலி 3 டி படம் மூலம் தமிழ் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே ஆர் டி கிரியேடிவ் ப்ரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி -ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது.

'ஆ ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது, பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும். இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிபடுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.

ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை ' ஆ' . ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏடிஎம் ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புதான் 'ஆ'.

ஆவி உலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் இந்தப் படம்.

திறமையான கலைஞர்கள் என பெயர் எடுத்த 'அம்புலி கணேஷ், சிம்ஹா, மேக்னா, பாலா, எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் நடிக்கும் 'ஆ' அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X