Ameer: "வடசென்னை ஷூட்டிங் முடியும் வரை தனுஷை சந்திக்கவே இல்லை.." அமீர் சொன்ன காரணம்!

சென்னை: அமீரின் பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலரும் அமீருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 Ameer: Ameer explains about Dhanush and VadaChennai film

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடித்தது குறித்து அமீர் மனம் திறந்துள்ளார்.

அதில், வடசென்னை படப்பிடிப்பு முடியும் வரை தனுஷை சந்திக்கவே இல்லை எனவும் அதற்கான காரணத்தையும் அமீர் ஓபனாக பேசியுள்ளார்.

தனுஷை சந்திக்காத அமீர்
மெளனம் பேசியதே மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், அடுத்தடுத்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் படங்களை இயக்கினார். இவைகளில் பருத்திவீரன் தமிழ்த் திரையுலகில் கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. அதேநேரம் கடந்த சில தினங்களாக இந்தப் படம் குறித்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமீருக்கு அதிகமானோர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திலும் அமீர் லீடிங் ரோலில் நடித்திருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் அமீரின் ராஜன் கேரக்டர் தான் செம்ம வெயிட்டாக இருந்தது.

இந்த கேரக்டரை பின்னணியாக வைத்து ராஜன் வகையறா என ஒருபடம் இயக்கவும் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். இதனிடையே சமீபத்தில் அமீர் கொடுத்த பேட்டியொன்றில் வடசென்னை படம் பற்றி பேசியிருந்தார். அதில், வடசென்னை படத்தில் நடிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றாலும் வெற்றிமாறனுக்காக கமிட்டானதாகக் கூறினார்.

அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை தனுஷ் சொந்தமாக தயாரித்துள்ளார். அதற்காக அமீரின் சம்பளம் குறித்து பேச தனுஷ் தரப்பில் இருந்து இயக்குநர் சுப்ரமணிய சிவா தான் சென்றுள்ளார். அமீர் கேட்ட சம்பளத்தை எந்தவிதத்திலும் குறைக்காமல் அப்படியே கொடுத்துவிட்டாராம் தனுஷ். அதேபோல், வடசென்னை ஷூட்டிங் முடியும் வரை தனுஷை பார்க்கவே இல்லை என அமீர் கூறியுள்ளார்.

படத்தில் எங்குமே அமீர் - தனுஷ் இணைந்து நடிக்கும் வகையில் காட்சிகள் கிடையாது. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட தனுஷை சந்திக்கவில்லை. கடைசியாக வடசென்னை ரிலீஸுக்கு முன் நடைபெற்ற ப்ரஸ் மீட்டில் தான் தனுஷை சந்தித்தேன். படம் ரிலீஸாக ஒருநாள் முன்பு தனுஷ் போன் செய்தார், அப்போது நாளைக்கு உங்க படம் ரிலீஸாகுதுன்னு சொல்லி வாழ்த்தினார்.

அதனை மறுத்துவிட்ட நான், "தனுஷ் இது உங்க படம்" என சொல்லிவிட்டேன். அதன்பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம், அதனால் தான் தனுஷ் சொன்னதற்காக அவருடன் மாறன் படத்தில் நடித்தேன் என அமீர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X