Ameer: “ஆண்ட்ரியா என்ன விட ஹைட்டா இருந்தாங்க... என்ன பண்றதுன்னு தெரியல..” அமீர் பட்டபாடு இருக்கே
சென்னை: அமீரின் பருத்திவீரன் சர்ச்சை பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பலரும் அமீருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்தது பற்றிய சுவாரஸ்யத்தை அமீர் பகிர்ந்துள்ளார்.
ஆண்ட்ரியாவிடம் அமீர் பட்டபாடு: சூர்யா ஹீரோவாக நடித்த மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ஜீவா நடித்த ராம் படத்தை இயக்கியிருந்தார். ஆனால், மூன்றாவதாக அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தை கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் அவரது கேரியரையும் உச்சத்தில் கொண்டு சென்றது.

இந்நிலையில் பருத்திவீரன் படம் ரிலீஸான நேரம் அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதில் பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்ததோடு ஞானவேல்ராஜாவை கடுமையாக எச்சரித்திருந்தனர். இந்த பிரச்சினை தற்போது பெரிதாக காரணமே வெற்றிமாறனின் வாடிவாசல் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது சூர்யா ஹீரோவாக நடிக்க வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதில் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். இதனால் சூர்யா வாடிவாசலில் இருந்து விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் வெற்றிமாறன் யாருக்காகவும் அமீரை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ராஜன் கேரக்டரில் அமீர் நடித்திருந்தார். கேமியோ ரோலாக 20 நிமிடங்கள் மட்டுமே வரும் ராஜன் கேரக்டர் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இதனால் அமீர் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்த கேரக்டர் குறித்து பேசிய அமீர், முதலில் வெற்றிமாறன் என்னை சந்தித்து நடிப்பது குறித்து கேட்டார்.
வெற்றிமாறனுக்காக நான் வடசென்னை படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாலும், ஆண்ட்ரியா தான் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் ஷாக்காகிவிட்டது. ஆண்ட்ரியா என்னைவிட ஹைட் அதிகம் என்றும், அப்படி இருக்கும் போது எப்படி நடிக்க முடியும்... இது செட் ஆகாது என வெற்றிமாறனிடம் கூறினாராம் அமீர். அதேபோல் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோரும் தன்னைவிட ஹைட் அதிகம் என அமீர் கூறியுள்ளார்.
ஆனால், வெற்றிமாறன் தான் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இதில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் போது தான் எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது என அமீர் ஒரு பேட்டியில் கூறியது வைரலாகி வருகிறது. இதனை இயக்குநர் வெற்றிமாறனும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











