Ameer: சிவகுமாருக்கு மெசேஜ் பண்ண அமீர்... ஒரேயொரு கேள்வி தான்... பதில் என்னன்னு தெரியுமா..?

சென்னை: பருத்திவீரன் சர்ச்சையில் பலரும் அமீர் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் அமீர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ameer-ameer-questioned-sivakumar-in-the-paruthiveeran-controversy

சிவகுமாரிடம் கேள்வி எழுப்பிய அமீர்
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமாகினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்தியை ஹீரோவாக அறிமுகம் செய்யலாம் என சிவகுமாரும் சூர்யாவும் முடிவு செய்துள்ளனர். அதன்பின்னர் தான் அமீரிடம் இந்த பொறுப்பை கொடுத்துள்ளார் சிவகுமார்.

பாலாவின் சேது படத்தில் சிவகுமார் விக்ரமின் அண்ணனாக நடித்திருப்பார். அப்போது தான் சிவகுமாருடன் நெருங்கிப் பழகியுள்ளார் அமீர். பின்னர் பாலாவின் நந்தா படத்தின் ஷூட்டிங்கில் சூர்யாவும் அமீரும் நண்பர்களாகினர். இதனால், சிவகுமார் குடும்பத்தில் ஒருவராக அமீர் இருந்துள்ளார். சூர்யாவின் அம்மா, தங்கை ஆகியோரும் அமீருக்கு நல்ல பழக்கம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பருத்திவீரன் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும், அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில் இந்தப் பிரச்சினை குறித்து பேட்டிக் கொடுத்த ஞானவேல்ராஜா, அமீரை திருடன் என தரக்குறைவாக பேசியிருந்தார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததோடு திரையுலகிலேயே அமீருக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன.

முன்னணி இயக்குநர் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சேரன், நந்தா பெரியசாமி, சினேகன் என பெரும்பாலானோரின் ஆதரவு அமீருக்கு கிடைத்தது. முக்கியமாக இந்த பிரச்சினை குறித்து கரு பழனியப்பம் கொடுத்த பேட்டியும் வைரலானது. இதனையடுத்தே சிவகுமார் ஞானவேல்ராஜாவை மன்னிப்புக் கேட்க கூறியுள்ளாராம்.

ஆனாலும் ஞானவேல்ராஜா மன்னிப்புக் கேட்காமல் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதமும் சர்ச்சையான நிலையில், இதுபற்றி சிவகுமாரிடமே அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது சிவகுமாருக்கு செல்போனில் மெசேஜ் பண்ண அமீர், அதில், "என் மகன் என்னை பார்த்து நீ திருடனா என கேட்கிறான். இதற்கு நான் என்ன பதில் சொல்லணும் அப்பா" என சிவகுமாரிடம் உருக்கமாகவும் உரிமையாகவும் கேட்டுள்ளார்.

இந்த மெசேஜ்ஜை பார்த்த சிவகுமார் அமீருக்கு பதிலே கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் தான் அமீரும் மிகவும் உடைந்துவிட்டாராம். நீதியும் கிடைக்காமல் உண்மையை தெரிந்த சிவகுமாரும் பேசாமல் இருப்பது சர்ச்சையாகி வருகிறது. கார்த்தியின் கையை பிடித்து என்னிடம் கொடுத்து பார்த்துக்கொள் எனக் கூறினார் சிவகுமார். அதனால் தான் பருத்திவீரனை கடன் வாங்கி முடித்தேன் என அமீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X