Ameer: பருத்திவீரன் ஷூட்டிங் ஸ்பாட்ல இதுதான் நடந்ததா..? டிவிட்டரில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.

பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல்ராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பருத்திவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திடீரென ட்ரெண்டாகி வருகின்றன.
பருத்திவீரன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
பருத்திவீரன் திரைப்படம் மூலம் கார்த்தியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அமீர். 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாஸிக் மூவி என இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியுடன் பணிபுரிந்த இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால் முதல் பட இயக்குநர் அமீர் மட்டும் ஆஜர் ஆகவில்லை. இதுகுறித்து அமீரிடம் கேட்கப்பட்டபோது, தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று சொன்னதோடு, பருத்திவீரன் சர்ச்சை குறித்தும் பேசியிருந்தார். பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல்ராஜா தயாரித்தார். இதனால் தனக்கு 2 கோடி வரை நஷ்டம் எனவும், இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதாகவும் அமீர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமீர் குறித்து ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டிகள் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞானவேல்ராஜாவின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொல்வது அனைத்தும் பொய் என அவர்கள் கூறியிருந்தனர்.
இதனால், கோலிவுட்டில் தொடர்ந்து பருத்திவீரன் சர்ச்சை தான் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் அமீர் பக்கமே நியாயம் இருப்பதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பருத்திவீரன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன. இதில் கார்த்தி, ப்ரியாமணி, பொன்வண்ணன் உள்ளிட்டோருக்கு அமீர் காட்சியை விவரிக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை அமீருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், Stand with Ameer என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துள்ளனர். அதேபோல், ஞானவேல்ராஜா குறித்து தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி சிவா ஆகியோர் பேசிய வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











