twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் சாதிக்க என்ன தேவை?: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்

    By Siva
    |

    மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் பானரோமியா 2019கே கலை விழாவில் இயக்குநர் அமீர் பங்கேற்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்.

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை 12 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் படித்த மாணவர்கள் சினிமா மற்றும் ரேடியோ துறையில் சாதனை படைத்து வருகிறார்கள். வருடம் தோறும் இந்த துறை சார்பில் கலை விழா நடைபெறும். இந்த ஆண்டு பானரோமியா 2019கே கலை விழா கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் 22 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

    Ameer attends Panaromia 2019K in The American College

    விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்து பேசினார். காட்சி தொடர்பில் துறை பேராசிரியர் நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர் டி. சைலஜா, பேராசிரியர் சங்கரி, பேராசிரியர் மோசஸ், பேராசிரியர் இதியோன், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    காட்சி தொடர்பியல் துறை சார்பில் பானரோமியா 2019கே கலை விழாவை தொடங்கி வைத்து சினிமா இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் பேசியதாவது,

    'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள் 'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்

    Ameer attends Panaromia 2019K in The American College

    இந்த கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் சொந்த ஊரில் இருக்கிற காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓப்புக்கொண்டேன். சினிமாவில் அவ்வளவு சுலபமாக சாதிக்க முடியாது. இந்த துறையில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.

    நான் ராம் படத்தை இயக்கி அந்த படம் நல்ல முறையில் ஓடியது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் சர்வதேச அளவில் விருது கிடைத்தது. ஆனால் விருது கிடைத்தும் ஊக்குவிக்க யாரும் முன் வரவில்லை. ஆகையால் சாதிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், வெற்றி பெறலாம் என்றார்.

    Ameer attends Panaromia 2019K in The American College

    பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். விழாவில் குறும்படம், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, மைம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை நாகர்கோவில் தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரியும், இரண்டாவது பரிசை திருச்சி தந்தை பெரியார் கல்லூரியும் வென்றது. மாலையில் நடைபெற்ற விழாவில் மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழின் மேலாளர் தீனதயாளன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    English summary
    Director Ameer has attended Panaromia 2019k held in The American college in Madurai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X