Ameer: “அக்ரீமென்ட் பேப்பரை காட்டுவீங்களா மாட்டீங்களா..?” ஞானவேல்ராஜாவுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி

சென்னை: பருத்திவீரன் பட சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.

அமீர் இயக்கிய இந்தப் படத்தில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பருத்திவீரன் படத்திற்காக அக்ரீமெண்ட் போடப்பட்டிருந்ததாக ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.

ஆனால், அமீர் இதனை மறுத்துள்ளதை அடுத்து, ஞானவேல் ராஜாவுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 Ameer: Blue Sattai Maran asks Gnanavelraja to show the Paruthiveeran agreement paper

ஞானவேல்ராஜாவுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி: பருத்திவீரன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்தி. 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் கார்த்தியின் சினிமா கேரியருக்கு அட்டகாசமான அறிமுக படமாக அமைந்தது. இந்தப் படதை அமீர் இயக்க, ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடி வரை நஷ்டம் எனவும், இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதாகவும் அமீர் கூறியிருந்தார். மேலும் ஞானவேல்ராஜா தான் இதற்கெல்லாம் காரணம் எனவும் அமீர் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து அமீருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக பேட்டிக் கொடுத்திருந்தார் ஞானவேல்ராஜா. அதில் அமீர் குறித்து மிக மோசமாக பேசியிருந்தார் ஞானவேல்ராஜா.

அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் திருடன் எனவும் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். மேலும், பருத்திவீரன் தொடர்பாக போடப்பட்ட அக்ரீமெண்ட் தன்னிடம் இருப்பதாகக் கூறிய ஞானவேல்ராஜா, தேவையென்றால் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்றார். ஞானவேல்ராஜாவின் பேட்டிகள் வைரலான நிலையில், பருத்திவீரன் சர்ச்சை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.

இதனையடுத்து ஞானவேல்ராஜாவின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவருமே ஞானவேல்ராஜா சொல்வது பொய் எனக் கூறியிருந்தனர். இதனால் அமீர் பக்கம் ஆதரவு பெருகிக்கொண்டு வருகிறது. இன்னொருபக்கம் இயக்குநர் சுதா கொங்கராவும் அமீர் பக்கம் சாய்ந்துவிட்டார்.

 Ameer: Blue Sattai Maran asks Gnanavelraja to show the Paruthiveeran agreement paper

அதாவது, பருத்திவீரனுக்கு முன்பு அமீரின் ராம் படத்தை பார்த்த சுதா கொங்கரா, மேக்கிங் சரியில்லை என நெகட்டிவாக விமர்சனம் செய்தார் என ஞானவேல்ராஜா கூறியிருந்தார். ஆனால், தற்போது அமீர் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த சுதா கொங்கரா, நேற்று தனது டிவிட்டரில் இரண்டு பதிவுகள் போட்டிருந்தார். இப்படி நாளுக்கு நாள் ஞானவேல்ராஜாவின் பொய்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஞானவேல்ராஜாவுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது அவர் சொன்னபடி, பருத்திவீரன் தொடர்பான ஆதாரங்கள், அக்ரீமெண்ட் பேப்பரை வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனை சந்திரமுகி படத்தின் பேய் இருக்கா இல்லையா என்ற டெம்ளேட்டுடன் மேட்ச் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "பருத்திவீரன் படத்துக்கு அமீருடன் அக்ரீமென்ட் போட்டேன் - ஞானவேல்.
அக்ரீமென்ட் போடவில்லை - அமீர்.
பப்ளிக் to ஞானவேல்:
அக்ரீமென்ட் பேப்பரை மீடியாவுக்கு காட்டுவீங்களா.. மாட்டீங்களா?" என கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X