Ameer: “மதுரை ஆர்மி சார்பாக களத்தில் குதித்தார் கஞ்சா கருப்பு..” பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: பருத்திவீரன் பிரச்சினையில் அமீர், ஞானவேல்ராஜா இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், சூர்யா, கார்த்தி ஆகியோரை ட்ரோல் செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் அலைகள் ஓய்வதில்லை
கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது. அமீர் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படமே கார்த்திக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதற்கெல்லாம் அமீர் தான் காரணம் என திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பருத்திவீரன் விவகாரத்தில் ஞானவேல்ராஜா அமீரை ஏமாற்றி விட்டதாக கஞ்சா கருப்பு கூறியிருந்தார். பருத்திவீரன் படத்தை அமீர் அண்ணன் தான் கடன் வாங்கி தயாரித்ததாக தெரிவித்தார். மேலும், பருத்திவீரனில் நான் சிங்கிள் டேக்கில் நடித்தேன், ஆனால் கார்த்தி 15 டேக் வாங்கினார். அதனால் தான் ஷூட்டிங் தாமதமானதோடு பட்ஜெட்டும் அதிகமானது எனக் கூறியிருந்தார்.
அதேபோல், நான் அமீர் அண்ணனின் விசுவாசி என்பதால், சூர்யா, கார்த்தி இருவரும் அவர்களின் படங்களில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க. எனக்கு கொலைவெறி ஆகுது என ஆதங்கமாக பேசியிருந்தார். தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு, சேரன், நந்தா பெரியசாமி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் கஞ்சா கருப்பும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில், கஞ்சா கருப்புவின் பேட்டியை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதலே அமீருக்கு தான் அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. அதனால் 'அலைகள் ஓய்வதில்லை' என்ற கேப்ஷனுடன் பருத்திவீரன் சம்பவங்களை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

இந்நிலையில் தற்போது கஞ்சா கருப்பு கொடுத்த பேட்டியை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "பருத்திவீரன் பஞ்சாயத்து. மதுரை ஆர்மி சார்பாக களத்தில் குதித்தார் கஞ்சா கருப்பு" என வைரலாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











