twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல? - இயக்குநர் அமீர்

    By Shankar
    |

    சென்னை: கர்நாடகம் - தமிழகம் இடையிலான காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரவேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

    காவிரிப் பிரச்சினை குறித்து நாம் தமிழர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இதுகுறித்துப் பேசுகையில், "காவிரிப் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நான் தலையிடக் கூடாது என்கிறார்.

    Ameer condemns BJP for dragging Rajini in Cauvery issue

    எங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உச்ச நீதிமன்றம் தான் தலையிட வேண்டும் என்றால்... பிரதமர் எதற்கு? உச்ச நீதிமன்ற நீதிபதியே போதுமே.. இத்தனை லட்சம் கோடிகள் செலவழித்து எதற்கு தேர்தல்?

    மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் 'நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இரு மாநிலத்துக்குமான உறவைச் சேர்த்து வைக்க வேண்டுமாம்.. பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாம்'.

    ஓட்டுக் கேட்க நீங்க வருவீங்க... பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரணுமா? ஏன்டா வெக்கமா இல்ல... எப்படி வெட்கமே இல்லாம, மான வெட்கம் சூடு சுரணை இல்லாம நீங்கள்லாம் டிவி முன்னாடி நின்னு பேட்டி கொடுக்கறீங்க?

    ஏன்டா, ரஜினிகாந்தா வந்து என்கிட்ட ஓட்டுக் கேட்டாரு? ரஜினிகாந்த்தா மேக் இன் இந்தியான்னு என்கிட்ட சொன்னாரு? ரஜினிகாந்தா க்ளீன் இந்தியா சொன்னாரு? சொன்னவங்கெல்லாம் ஓடிப் போயிட்டாங்க...," என்றார்.

    English summary
    Director Ameer has condemned BJP for dragging Rajinikanth in Cauvery issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X