விஜய் படம் குறித்து மௌனம் ஏன்? உண்மையை சொல்ல பயமா? வினோத்தை நேரடியாக கேள்வி கேட்ட அமீர்!

சென்னை: ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்திருக்கும் படம் ஜன நாயகன். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வர இருந்து சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தற்போது வரை படம் வெளியாகமல் உள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத் அது நம் கையில் இல்லை. அதில் இருக்கும் உண்மையை எல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு இல்லை. அதனால் வரும் போது பார்ப்போம் என பேசி இருந்தார்.

அமீர் பேச்சு: இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமீர், ஹெச் வினோத் பேசியதை நான் மிகவும் வருத்தமாக பார்க்கிறேன். இந்த சமுதாயத்தில் உங்களுக்கு நடக்கக் கூட பிரச்சனையை அநீதியை சொல்ல தயங்குறீர்கள் என்றால், பின் யார் தான் அதை சொல்வார்கள். ஜன நாயகம் திரைப்படத்தின் நாயகனான விஜய் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது உங்கள் படத்தில் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டியது தானே? யார் தவறு செய்தார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்.

CM Vijay Jana Nayagan Ameer
Photo Credit:

பொய் தகவல்: ஏன் குறிப்பா இந்த விஷயத்தை சொல்கிறேன் என்றால், ஜன நாயகம் படம் திருட்டுத்தனமாக வெளியான போது, இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜுன் அவர்கள் பிரச்சாரத்தில், அமைச்சர் எல் முருகன் அவர்களும், இன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி அவர்களும் சேர்ந்து வெளியிட்டார்கள் என சொல்லிவிட்டு அதை அப்படியே கடந்து விட்டார். அப்போதே எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதை தேர்தல் பிரச்சாரத்திற்கான யுக்தியாக தான் பார்க்க முடிந்தது தவிர, அதில் உண்மை தன்மை இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அது ஒரு பொய் தகவல் தான். அது ஒரு பொய் தகவலாக இருப்பதால் தான் உங்களால் அதை நிரூபிக்க முடியவில்லை.

CM Vijay Jana Nayagan Ameer
Photo Credit:

என்ன பயம்: அப்படி இருக்கும்பொழுது என்ன நடந்தது என சொல்ல நான் மறுக்கிறேன் என இயக்குனர் சொன்னால், அதை யார் தான் சொல்வார். மக்களால் எப்படி உண்மையை கண்டறிய முடியும். படத்தை யார் தடுக்கிறார்கள் என சம்பந்தப்பட்டவர்களும் சொல்லவில்லை, தடுப்பவர்களும் சொல்லவில்லை என்றால் நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும். ஒரு பாதிக்கப்பட்டவர் தனக்கு நடந்த அநீதியை பொது இடத்தில் சொன்னால் தானே, அதில் என்ன நடந்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். இதனால் இயக்குனர் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என அமீர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X