அமீருக்கு கைகொடுக்கிறார் கமல்?

பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினையில் இயக்குநர் அமீர் தொழிலாளர் பக்கம் நிற்கிறார். இது தயாரிப்பாளர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. தொழிலாளர்களை தயாரிப்பாளர்களுக்கு எதிராகத் தூண்டி விடுவதாகக் கூறி அமீருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
இதைத் தொடர்ந்து பாரதிராஜாவின் படத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் அமீர்.
இந்த சூழலில் அமீருக்கு தனது அடுத்த பட வாய்ப்பை கமல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க கமல் நடிக்கும் படம் இது.
ஏற்கெனவே இரு முறை கமலை இது தொடர்பாக அமீர் சந்தித்துப் பேசியுள்ளாராம். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.
பெப்சிக்கு ஆதரவானவர்தான் கமல்ஹாஸனும். முன்பு பெப்சியா படைப்பாளிகளா என்ற பிரச்சினை வந்தபோது, பகிரங்கமாக பெப்சியை ஆதரித்ததோடு, தன் படத்திலும் பெப்சியை உயர்த்திப் பேசியவர் கமல். எனவே இப்போது அமீருக்கு அவர் கை கொடுத்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விஷயமில்லை, என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











