Ameer: "நன்றி மறந்து முதுகில் குத்தினாலும் திமிரோடு தான் நிற்பேன்..” ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதிலடி
சென்னை: அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படம் மூலம் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார்.
இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்நிலையில், பருத்தி வீரன் படத்தால் தனக்கு நஷ்டம் என அமீர் கூறியிருந்ததற்கு, ஞானவேல் ராஜா மறுப்புத் தெரிவித்து பேட்டிக் கொடுத்திருந்தார்.
ஞானவேல் ராஜாவின் பேட்டி வைரலானதைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் அமீர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதிலடி
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்தி, பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அமீர் இயக்கிய இந்தப் படம், கார்த்தியின் கேரியருக்கு அட்டகாசமான தொடக்கமாக அமைந்தது. மதுரை பின்னணியில் கிராமத்து புழுதி பறக்கும் வகையில் செம்ம மிரட்டலாக உருவாகியிருந்தது பருத்தி வீரன்.
கார்த்தியுடன் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய புகழை கொடுத்தது. சூர்யாவின் உறவினரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்தார். இந்நிலையில் பருத்தி வீரன் ரிலீஸாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும், அமீர் - ஞானவேல் ராஜா இடையேயான பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.
ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை கூப்பிடவில்லை என வேதனையை வெளிப்படுத்திய அமீர், இறுதியாக பருத்தி வீரன் படத்தால் தனக்கு தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். மேலும், சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்கள் நட்பை கெடுத்துவிட்டதாகக் கூறியிருந்தார். அமீரின் இந்த பேச்சு கோலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்தது.
இதனையடுத்து அமீரின் குற்றச்சாட்டுகளுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் கொடுத்திருந்தார். அதில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை, அவர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார்களை அடுக்கினார். நந்தா படத்தில் இருந்து சூர்யா, அமீர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால், அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே மூவியில் சூர்யா நடித்துக் கொடுத்தார். ஆனால் அமீர் இயக்குநரானதும் ரொம்பவே மாறிவிட்டார்.
மேலும், அமீர் தன்னிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் போனதால், பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கிக் கொடுத்தார். அதேபோல், 2.75 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்து பருத்தி வீரன் படத்தை எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் திரையில் வராமல் போன பன்றிகளுக்கும் கணக்கு காட்டினார்.
இப்படி பலவிதங்களில் தன்னிடம் இருந்து பணம் சம்பாதித்த அமீர், பின்னர் இதனை பிரச்சினையாக மாற்றிவிட்டார். இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என நினைத்த சிவகுமார் சாரையும் பருத்திவீரன் பட வழக்கில் அமீர் சேர்த்துள்ளார். மேலும், அமீர் என்னை ஏமாற்றியதை போல இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் அமீர் தற்போது காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், “நன்றி மறந்து நீ என் முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும் உன் எதிரே திமிரோடு தான் நிற்பேன். உன்னைப் போல் நடிகர்களின் பின்னால் ஒளிய மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











