அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து அமீர் நீக்கம்!
பெப்சி பிரச்சினையின் தொடர் விளைவாக அமீர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அமீர் இப்படத்தில் நடித்தவில்லை என்றும், எனது அடுத்த படத்தில் அமீர் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினையில் அமீர் மையப்புள்ளியாக இருப்பதாலும், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது தடை விதித்திருப்பதாலும்தான் பாரதிராஜா தனது படத்தில் இருந்து அமீரை நீக்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இதனை மறுத்தார் பாரதிராஜா.
ஏற்கனவே இப்படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பார்த்திபன். போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு அமீரை ஒப்பந்தம் செய்தார் பாரதிராஜா. இப்போது அமீரும் நீக்கப்பட்டுவிட்டார்.
அமீரின் கதாபாத்திரத்தில் தனது மகன் மனோஜையே நடிக்க வைக்க பாரதிராஜா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகாவும், வாகை சூட வா பட நாயகி இனியாவும் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகை ரோஜா மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கெனவே அமீரை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிகாக எடுக்கிறார் பாரதிராஜா.
இந்தப் படத்தின் தொடக்க விழாவுக்காக பாரதிராஜா தனது சொந்த ஊரான தேனி அல்லி நகரத்துக்கே தமிழ் திரையுலகையே வரவழைத்து பெரிய விழா நடத்தி படத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












