Ameer: பருத்திவீரன் லாரியில் இடம்பெற்ற ராமதாஸ் பெயர்?.. அப்பவே அரசியல் குறியீடு வைத்த அமீர்!

சென்னை: தலைவர் 170 படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற கேலண்டர் படத்துக்காகவும் போலீஸ் அதிகாரிக்கு குருமூர்த்தி பெயர் சூட்டப் பட்டதற்காகவும் பாமகவினர் பெரும் பிரச்சனை செய்து வழக்கு எல்லாம் தொடுக்கப்பட்டது.

ஆனால், சூர்யா தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற லாரியிலேயே ராமதாஸ் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்த கேள்விக்கு அமீர் அதிரடியாக பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Ameer explains why he place Ramdoss named lorry in Paruthiveeran

அப்பவே அமீர் தனது படத்தில் இப்படியொரு சர்ச்சை குறியீட்டை வைத்திருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பருத்திவீரன் பஞ்சாயத்து: கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை பாதியிலேயே ஞானவேல் ராஜா விட்டுச் சென்றார் என்றும் அமீர் தான் பலரிடம் கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார் என்றும் சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். பருத்திவீரன் படம் தான் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் போல்டான பெண் கதாபாத்திரங்களை வைக்கவே இன்ஸ்பிரேஷன் என சுதா கொங்கராவும் ட்வீட் போட்டு அமீரை பாராட்டி உள்ளார்.

Ameer explains why he place Ramdoss named lorry in Paruthiveeran

அமீர் என்ன பாரதிராஜாவா?: ஆனால், அமீருக்கு இயக்கவே தெரியாது என ராம் படத்தை பார்த்து விட்டு சுதா கொங்கரா சொன்னதாகவும் தனக்கே அந்த படத்தின் மீது 50 - 50 அபிப்ராயம் தான் என்றும் பேசிய ஞானவேல் ராஜா அமீர் என்ன பாரதிராஜாவா? என்றும் கேள்வி எழுப்பி பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார்.

வாடிவாசலில் அமீர்: அமீர் - கார்த்தி பிரச்சனை பல காலமாக உள்ள நிலையில், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிப்பதை மீண்டும் உறுதி செய்து அவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமீர். அதுமட்டுமின்றி அமீரே தனக்குத் தானே நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சியில் கூட சூர்யாவும் தானும் ஆரம்ப கால நண்பர்கள் என்றும் நடிப்பு உலகில் சூர்யா தொட்டுள்ள உச்சம் என்னையே வியக்க வைத்துள்ளது. அவருடன் ஒரே ஸ்க்ரீனில் எப்படி நடிக்கப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Ameer explains why he place Ramdoss named lorry in Paruthiveeran

ராமதாஸ் பெயர் போட்ட லாரி: ஜெய்பீம் படத்தில் கேலண்டரே பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு எல்லாம் முன்னதாகவே பருத்திவீரன் படத்தில் கலப்புத் திருமணம் செய்துக் கொண்ட ஜோடியை ஏற்றிக் கொல்லும் லாரியில் ராமதாஸ் பெயர் இடம்பெற்றது தற்செயலா? அல்லது திட்டமிட்ட ஒன்றா? என ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு திட்டமிட்டு அந்த பெயர் போட்ட லாரியை கொண்டு வர சொல்லவில்லை. ஆனால், வந்தவுடன் coincidence-ஆ இருக்கே என வைத்தோம் என அதிரடியாக பதில் அளித்துள்ளார். தற்போது அமீரின் இந்த பேச்சு அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X