Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினியோடு மோத தயாராகிறாரா அமீர்? - 'காலா' ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட திட்டம்!
Recommended Video
சென்னை : தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
பெரும்பாலான தியேட்டர்கள் காலாவுக்கு ஒதுக்கப்படும் என்பதால் 'காலா' ரிலீஸ் ஆகும் நாளில் வேறு படங்கள் எதுவும் வெளியாகாது எனக் கருதப்படுகிறது. ஆனால், அமீர் தயாரித்துள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படம் அதே தேதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த முத்துகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அச்சமில்லை அச்சமில்லை'. தமிழகத்தில் நடக்கும் பல பிரச்னைகளை மையைப்படுத்தியும் அதில் ஒரு பிரச்னையை பிரதானப்படுத்தியும் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் இயக்குநர் அமீரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினியின் கருத்துகளுக்கு எதிரான நிலையில் இருக்கும் அமீர் ரஜினியின் காலா படத்திற்கு எதிராக தனது படத்தைக் களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படம் மக்கள் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். 'காலா' பட ரிலீஸ் அன்றே இப்படம் வெளியாகுமா மென்பது விரைவில் தெரியவரும்.