அபிஷேக் பண்றது எரிச்சலா இருக்கு.. செம காண்டாகுது… புலம்பிய அமீர் !

சென்னை : அபிஷேக் தேவையில்லாமல் எல்லா விஷயத்திலையும் தலையிடுறான் அது எனக்கு செம காண்டாகுது என்று அமீர் கூறினார்.

பிக் பாஸ்வீட்டில் இந்த வார கனா காணும் காலங்கள் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் வார்டனா சிபியும் ஆசிரியராக ராஜு, அபிஷேக், அமீர் இருந்தனர்.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாக இருந்தனர். இதில், இமான் பள்ளி மாணவராக இருந்து பல சேட்டைகளை செய்தார். இது பார்ப்பதற்கு ரசிக்கும் படியும் சிரிக்கும் படியும் இருந்தது.

சிறந்த போட்டியாளர்கள்

சிறந்த போட்டியாளர்கள்

இதையடுத்து, இன்று பிக் பாஸ் வீட்டில், பள்ளி டாஸ்கில் சிறப்பாக விளையாடிய 3போட்டியாளர்களை தேர்வு செய்யும் படி பிக் பாஸ் கூறினார். இதில், இமான், சிபி, அபிஷேக் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று பிக் பாஸ் கூறினார்.

பாதாள சிறையில்

பாதாள சிறையில்

இதையடுத்து, மிகவும் மோசமாக விளையாடிய 2 போட்டிகளை தேர்வு செய்யுமாறு பிக் பாஸ் அறிவித்தார். இதில் அமீர் மற்றும் நிரூப் மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் பிக் பாதாள சிறையில் அடைத்தார்.

தேவையில்லாமல் பேசுறான்

தேவையில்லாமல் பேசுறான்

பாதாள சிறையில் நிரூப் மற்றும் அமீர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பேசிய அமீர், வந்த 2 நாள்ல நான், நிறைய விஷயம் தெரிஞ்சிக்கிட்டேன் என்று கூறினார். அபிஷேக் தேவையில்லாமல் எல்லா விஷயத்திலையும் தலையைவிடுறான், அது எனக்கு காண்டாகுது, நமக்கு கொடுத்து இருக்கும் டாஸ்கில் அவன் விளையாடுறான் அது செம காண்டாக்குது என கூறுகிறார்.

சாமர்த்தியமாக இருக்காங்க

சாமர்த்தியமாக இருக்காங்க

தாமரையை பற்றிய தனது கருத்தை நிரூப்பிடம் தெரிவித்த அமீர். தாமரை ரொம்ப சாமர்த்தியமா இருக்காங்க, இது எல்லாருக்கும் தெரிலயா என்னான்னு தெரிய என அமீர் சொல்கிறார். இதற்கு நிரூப், அறியாமையா இருக்கலாம் என்று கூறுகிறார். அறியாமை எல்லாம் இல்ல அவங்களுக்கு வேண்டியவங்க விஷயத்துல கரெக்ட்டா காய் நகத்துறாங்க, அவங்க மேல ஒரு பரிதாபத்தை உருவாக்குறாங்க, எனக்கு அவங்க நெகட்டிவா தான் தெரியுறாங்க என்றார்.

அதிரடியான கருத்து

அதிரடியான கருத்து

தொடர்ந்து பேசிய அமீர், ராஜு உண்மையான கேரக்டர் இதுவானு எனக்கு தெரியல, அதுபோலத்தான் சிபியும் என்று அடுக்கடுக்காக பலரைப்பற்றி கூறிக்கொண்டே போனார் அமீர். இரண்டு நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்த அமீர் இன்று தனது கருத்தை அதிரடியாக முன்வைத்துள்ளார். இனி இவர் வீட்டில் எப்படி நடந்து கொள்வார் என்பதை பொருத்து இருந்த பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X