Ameer: “அமீர் அப்படி சொன்னதும் ரோட்டுலயே அழுதேன்..” உண்மையை ஓபனாக சொன்ன சினேகன்!

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக சினேகன் குரல் கொடுத்திருந்தார். அமீர் இயக்கிய படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார் சினேகன்.

அமீரால் ரோட்டில் அழுத சினேகன்: பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கிய அமீர், ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் ஆகவும் மாறினார். ஆனால், கடைசியில் படம் ஞானவேல்ராஜா பேனரில் வெளியானது.

 Ameer: Lyricist Snekan opens up about Ameer friendship

இதனால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் என அமீர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும், இதுபற்றி அவர் கொடுத்த பேட்டியால் கோலிவுட்டே பரபரப்பானது. அதேபோல், அமீருக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து ஞானவேல்ராஜாவும் பேட்டிக் கொடுத்திருந்தார். அதில் அமீர் குறித்து ஞானவேல்ராஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அமீருக்கு ஆதரவாக ஏராளமான திரை பிரபலங்கள் குரல் கொடுத்தனர். அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், குட்டிச்சாக்கு, பாரதிராஜா, சேரன், கரு பழனியப்பன், கஞ்சா கருப்பு, சினேகன் ஆகியோர் ஞானாவேல்ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முக்கியமாக சினேகனின் டிவிட்டர் பதிவும் பேட்டியும் கவனம் ஈர்த்தது.

"நான் இயக்குநர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்திவீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

அதேபோல், பருத்திவீரன் படத்தில் பாடல்கள் எழுதியதற்கு சம்பளம் வாங்கவில்லை எனவும் சினேகன் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் அதே சினேகன் அமீரால் நடு ரோட்டில் அழுததும் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது பாலா இயக்கிய ஒரு படத்தில் சினேகன் பாடல் எழுதியுள்ளார். ஆனால், அது படத்தில் இடம்பெறவில்லையாம். இது தெரியாமல் சினேகன் அடிக்கடி பாலாவின் ஆபிஸ் சென்றுள்ளார்.

இதனை பார்த்து கஷ்டமான அமீர், சினேகனை தனியாக அழைத்துச் சென்று இந்தப் படத்தில் நீங்கள் எழுதிய பாடல் இடம்பெறவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் இனி இங்கு வர வேண்டாம் என அட்வைஸ் செய்த அமீர், நான் படம் இயக்கும் போது கண்டிப்பாக வாய்ப்புத் தருகிறேன் என்றாராம். இதனைக் கேட்ட சினேகன் ரோட்டிலேயே அழுதுள்ளார். அதேபோல், சொன்னபடி தனது முதல் படமான மெளனம் பேசியதே மூவியில் சினேகனுக்கு பாடல் எழுத சான்ஸ் கொடுத்துள்ளார். இக்கூட்டணியில் உருவான முதல் பாடல் தான், 'ஆடாத ஆட்டமெல்லாம்' என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X