Ameer: "ஞானவேல் ராஜா சொல்றதெல்லாம் பொய்.. அமீர் மிஸ்டர் க்ளீன்..” தயாரிப்பாளர் கொடுத்த சர்டிபிகேட்

: அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் 2007ல் வெளியானது.

இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்திருந்தார்.

 Ameer: Mounam Pesiyadhe producer supported director Ameer for Gnanavel Raja accusation

பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி நஷ்டம் எனவும், அதற்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அமீர் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் அமீர் மீது ஞானவேல் ராஜா குற்றம்சாட்டி இருந்த நிலையில், மெளனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு அமீருக்கு சப்போர்ட் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சொல்றதெல்லாம் சுத்த பொய்
அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. தற்போது வரை 25 படங்களில் நடித்துவிட்ட கார்த்தி, கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார். கார்த்தியின் கேரியர் சக்சஸ்ஃபுல்லாக அமைய அவரது முதல் படமான பருத்தி வீரன் தான் காரணம் என அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் எனவும், இதற்கெல்லாம் காரணம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்றும் கூறியிருந்தார். மேலும், இது தொடர்பாக தான் தொடர்ந்த வழக்கிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அமீருக்கு பதிலடி கொடுக்க, பல யூடியூப் தளங்களில் பேட்டிக் கொடுத்திருந்தார் ஞானவேல் ராஜா.

 Ameer: Mounam Pesiyadhe producer supported director Ameer for Gnanavel Raja accusation

அதில், அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே மூவியில் சூர்யா நடித்துக் கொடுத்தார். ஆனால் அமீர் இயக்குநரானதும் ரொம்பவே மாறிவிட்டார். மெளனம் பேசியதே படத்தை தயாரித்த அபராஜித் பிலிம்ஸ் கணேஷ் ரகு, இயக்குநராக அமீர் வேண்டாம் எனக் கூறினார். ஆனால், சூர்யா தான் அமீருக்காக இந்தப் படத்தில் நடிக்கிறேன் என தயாரிப்பாளரை சமாதனம் செய்ததாக ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

மேலும், அமீர் மீது இருந்த கோபத்தில் மெளனம் பேசியதே இசை வெளியீட்டு விழாவுக்கு சூர்யா வர முடியாது என மறுத்துவிட்டதாகவும், பின்னர் அவரை நான் தான் அழைத்துச் சென்றதாகவும் பேட்டிக் கொடுத்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் பருத்தி வீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்த அமீர், பொய் கணக்கு காட்டி தன்னிடம் இருந்து பல லட்சங்களை சம்பாதித்துவிட்டதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.

அமீர் என்னை ஏமாற்றியதை போல இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும், அவரை திருடன் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து இந்தச சம்பவம் குறித்து மெளனம் பேசியதே தயாரிப்பாளர் அபராஜித் பிலிம்ஸ் கணேஷ் ரகு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது நந்தா படத்தின் தயாரிப்பின் போதே அமீருடன் தனக்கு நெருங்கிய நட்பு உண்டு.

அதனால், அமீரின் முதல் படத்தை நான் தயாரிக்க வேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டேன். இதனையடுத்து நான் தான் அமீரிடம் மெளனம் பேசியதே படத்தை தயாரிப்பதாக சொன்னேன். இதில் ஞானவேல் ராஜா சொல்றதெல்லாம் சுத்தமான பொய். அவர் சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லை. அமீர் தான் அந்தப் படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அதேபோல் தயாரிப்பின் போதும் அமீர் சரியாக கணக்கு கொடுத்துவிடுவார். அவரின் நேர்மைக்காக தான் மெளனம் பேசியதே படத்தை தயாரித்தேன். ஞானவேல் ராஜா சொல்வது மாதிரியெல்லாம் அமீர் பொய் கணக்கு சொல்பவர் இல்லை. நானே சொன்னாலும் அமீர் அப்படி செய்தது கிடையாது என மெளனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு பேட்டி கொடுத்துள்ளார். மேலும், அமீர் குறித்து ஞானவேல் ராஜா சொன்ன எதுவுமே உண்மையில்லை எனவும் கணேஷ் ரகு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X