Ameer -Pavani new movie :அமீர் -பாவனியின் புதிய படம்.. பூஜையுடன் துவக்கம்!

சென்னை : பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்களில் அமீர் மற்றும் பாவனி இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் தொடர்ந்து திரையில் பயணித்து வருகின்றனர்.

இருவரும் பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி, காதலர்களாக உலகையே சுற்றி வருகின்றனர். அடுத்த ஆண்டில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Ameer -Pavanis new movie starts with Pooja and Ameer directs the movie

இந்நிலையில் அமீர் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் பாவனி லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அமீர் -பாவனியின் புதிய படம் : விஜய் டிவியின் பிக்பாஸ் பலருக்கு சிறப்பான முகங்களை கொடுத்துள்ளது. பலரது திரையுலக பயணத்திற்கு வெளிச்சத்தை கொடுத்துள்ள இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் களமிறங்கினார் நடிகை பாவனி. முன்னதாக தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள இவர், முன்னதாக திருமணமாகி கணவரை இழந்தவர். இவரது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதை, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்திய போது, சக போட்டியாளர்கள் மட்டுமில்லாமல், ரசிகர்களும் கலங்கித்தான் போனார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இடையில் நுழைந்த அமீர், பாவனியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். நடன இயக்குநரான அமீர், பாவனியை எந்தவகையிலும் தொல்லை செய்யாமல் தன்னுடைய காதலை தொடர்ந்தார். முதலில் இவரது காதலை ஏற்றுக் கொள்ளாத பாவனி, தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, டைட்டிலை வெற்றிப் பெற்ற நிலையில், மேடையிலேயே அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார்.

Ameer -Pavanis new movie starts with Pooja and Ameer directs the movie

தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தங்களது திருமணம் குறித்தும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அடுத்த ஆண்டில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறினர். இதனிடையே, இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து இவர்கள் குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வந்துக் கொண்டிருக்கின்றன.

திடீரென பாவனி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வரும். உடனே இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகும். இவர்கள் இருவரும் இதனால் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே உள்ளனர். சமீபத்தில் இருவரும் இணைந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அமீர் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Ameer -Pavanis new movie starts with Pooja and Ameer directs the movie

ஷபீர் சுல்தா என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். முன்னதாகவே இயக்குநராக அமீர் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்றைய தினம் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாவனி, இந்தக் கதையை தனக்காகவே எழுதப்பட்டதாக தான் உணர்வதாக தெரிவித்தார். அமீர் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும், சிறிய விஷயங்களுக்காகவும் அவர் அதிகமாக மெனக்கெடுவார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X