Ameer: ”அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல..” பருத்தி வீரன் பஞ்சாயத்து.. ஓபனாக பேசிய ஞானவேல் ராஜா!

சென்னை: கார்த்தியின் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குநர் அமீர் அழைக்கப்படவில்லை என சொல்லப்பட்டது.

அதற்கான காரணம் பற்றி பேசிய அமீர், பருத்திவீரன் படம் உருவாகும் போது நடந்த சம்பவங்களை வெளிப்படையாக கூறியிருந்தார்.

Ameer: Producer Gnanavel Raja responded to Ameer on the issue of Paruthiveeran

பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் என்றும், அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

அமீரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஞானவேல் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

பருத்திவீரன் பஞ்சாயத்து இதுதான்
கார்த்தியின் 25வது படமாக உருவான ஜப்பான், தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியை இதுவரை இயக்கிய இயக்குநர்களில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். ஆனால், கார்த்தியை பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்திய அமீர் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து இயக்குநர் அமீரிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், பருத்திவீரன் படத்தின் வெற்றியால் கார்த்தியின் கேரியர் உச்சம் தொட்டது. ஆனால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் தான் மிச்சம். சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்கள் நட்பை கெடுத்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

மேலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் தனக்கான நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை. இப்போது நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருப்பதாக பேசியிருந்தார். இயக்குநர் அமீரின் இந்த பேட்டி திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் அமீரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அதில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லையென அசால்டாக டீல் செய்துள்ளார்.

அதாவது, நந்தா படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா - அமீர் அண்ணன் இடையே நட்பு ஏற்பட்டது. அதனால் தான் அமீருக்காக மெளனம் பேசியதே படத்தில் நடித்துக் கொடுத்தார் சூர்யா. ஆனால், இயக்குநரானதும் அமீர் அண்ணனின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. இதனால் சூர்யா மெளனம் பேசியதே இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வரவில்லை. அதேபோல், பருத்தி வீரன் படம் நானாக தயாரிக்கவில்லை, அதுவும் அமீருக்காக தான் என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மேலும், அமீர் தன்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கிக் கொடுத்ததாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். அப்போதும் கூட அமீர் மீது கார்த்திக்கு நம்பிக்கை இல்லை, நானும் சூர்யாவும் சேர்ந்து தான் பருத்திவீரன் கதை கண்டிப்பாக ஹிட்டாகும் என கார்த்தியிடம் சொல்லி புரிய வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்துவிடலாம். ஆனால் அமீர் அண்ணனுக்காக தான் எல்லாம் செய்தேன். இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சினை குறித்து நான் பேசத் தயார் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என நினைத்த சிவகுமார் சாரையும் பருத்திவீரன் பட வழக்கில் அமீர் சேர்த்துள்ளார். இது நியாயமே கிடையாது, அவர் தன்னை இயக்குநர் பாரதிராஜா போல நினைத்துக்கொள்கிறார். அவருக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது. அமீர் சைன் பண்ண மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் பேசினால் இன்னும் நிறைய விஷயங்கள் வெளியே வரும். இனியும் அமீர் அண்ணன் இந்த விசயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால், நானும் விடாமல் பதிலடி கொடுப்பேன் என காட்டமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X