ஜாபருடன் என்னை தொடர்பு படுத்த வேண்டாம்.. விசாரணைக்கு தயாராக உள்ளேன்.. வீடியோ வெளியிட்ட அமீர்!
சென்னை: இறைவன் மிகப்பெரியவன் மற்றும் மங்கை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தனக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். ஆனால், தொடர்ந்து தன்னை அவருடன் தொடர்ப்பு படுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது என அமீர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் அவரை தேடி வருகின்றனர். தலைமறைவாகி விட்ட ஜாபரை போலிஸ் தேடி வரும் நிலையில், அவரது வீட்டுக்கு சீல் வைத்திருக்கின்றனர்.

பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்த அவர் உதவி செய்திருப்பதாகவும் கடத்தல் விவகாரங்களில் அவருக்கு மிகப்பெரிய தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
அமீர் பட தயாரிப்பாளர்: இயக்குநர் அமீர் நடித்து வரும் இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் அதன் பின்னர் ஊடகங்கள் வாயிலாக வந்த செய்தியின் மூலம் தான் அவருக்கு இதில் தொடர்பு இருப்பதே தனக்குத் தெரியும் என்றும் தவறான செயல்களில் ஈடுபடுவோருடன் இனி தொடர்ந்து பயணிக்க மாட்டேன் என அமீர் கூறியுள்ளார். இறைவன் மிகப்பெரியவன் படம் இனிமேல் வராதா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
அமீர் பற்றிய ட்ரோல்கள்: ஆனால், இயக்குநர் அமீர் ஜாபர் சாதிக்குடன் மிகவும் நெருங்கி பழகி வந்தவர் என்றும் இருவரும் இணைந்து உணவகங்கள் எல்லாம் ஆரம்பித்தனர் என்றும் ஜாபர் சாதிக்கின் பார்ட்னரே அமீர் தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் அமீரை தாக்கி வலம் வந்தன. இந்நிலையில், அதற்கு தற்போது மீண்டும் தெளிவாக வீடியோ மூலம் அமீர் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
காயப்படுத்த வேண்டாம்: ஏற்கனவே இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்புடைய குற்றங்களில் தனக்கு தொடர்பு இல்லை என்பதை விளக்கி விட்டேன். ஆனாலும், சோஷியல் மீடியாவிலும் சில ஊடகங்களிலும் அன்பிற்குரிய நண்பர்களே என்னை பற்றிய தவறான செய்திகளை பரப்புகின்றனர். உங்களால் என்னையும் என் குடும்பத்தினரையும் தான் அதன் மூலம் காயப்படுத்த முடியும். தவறான வழிகளுக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்ட மார்க்கத்தில் இருந்து வந்தவன் நான் தவறு செய்யவில்லை என அமீர் பேசியுள்ளார்.
விசாரணைக்கு ரெடி: மேலும், போலீஸார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செல்லத் தயாராக உள்ளேன். நான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. இறைவன் மிகப்பெரியவன் என அமீர் தனது புதிய வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
பருத்தி வீரன் பஞ்சாயத்து: கடந்த ஆண்டு அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே ஏற்பட்ட பருத்தி வீரன் பஞ்சாயத்து பெரிய சர்ச்சைகளை கிளப்பின. சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது ஜாபர் சாதிக் விவகாரத்தில் மீண்டும் அமீரின் பெயர் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்ச்சையிலேயே அமீர் சிக்கி வருகிறாரே என ரசிகர்களும் விவாதித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











