ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் நீரையும் தாருங்கள்.. கர்நாடக எம்.பிக்கள் முன் அமீர் பேச்சு

By Shankar
<ul id="pagination-digg"><li class="next"><a href="/movies/news/2012/09/ameer-requests-karnataka-mps-mlas-cauvery-water-2-160643.html">Next »</a></li></ul>

சென்னை: ரஜினி, அர்ஜுன் போன்றவர்களை தந்தது போல, கொஞ்சம் காவிரித் தண்ணீரையும் தமிழகத்துக்கு அனுப்பி வையுங்கள், சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம், என்று இயக்குநர் அமீர் கூறினார்.

Ameer
ஸ்ரீகாந்த் - ஜனனி நடிக்க, அஸ்லாம் இயக்கத்தில் உருவாகியுள்ள பாகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யாம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், விழாவிற்கு கர்நாடக எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் வந்திருந்தார்கள்.

ரஜினிகாந்த், அர்ஜூன் உட்பட பலர் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழில் வெற்றிவாகை சூடியதை நினைவூட்டி அவர்கள் பேசினார்கள்.

"தமிழ்நாட்டு மீது எங்களுக்கு அன்பு அதிகம். அந்த அன்புதான் எங்களை இங்கே வரவழைத்தது. அந்த அன்புதான் அனைவரையும் அரவணைத்து வாழ வைத்திருக்கிறது," என்று பேசினர்.

இயக்குநர் அமீர் பேசியது விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேச்சு:

'பாகன்' படம் சைக்கிளோடு தொடர்புடையது. எனது சைக்கிள் அனுபவம் புதுமையானது. காதலி போல கடைசி வரை அது எனக்கு கிடைக்கவே இல்லை. வசதியான குடும்பத்தில பிறந்தாலும் 3 வயதிலேயே தந்தையை இழந்தேன். அம்மா படிக்காதவள். அவளுக்கு எனக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருந்ததால் சைக்கிள் வாங்கித் தரவில்லை. மேல் படிப்பு படிக்கும்போதும் சைக்கிள் வாங்கித் தரவில்லை. என் அண்ணன்களுக்குகூட அம்மா சைக்கிள் வாங்கித் தரவில்லை. எங்காவது விழுந்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.

பக்கத்து வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அதனால் அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுப்பேன். காரணம் அவர்கள் சைக்கிள் தருவார்கள். அழகான சைக்கிள் என்பது வெறும் கனவாகவே இருந்தது. கல்லூரி 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் பஸ்சில் சென்றேன். அப்போதும் சைக்கிள் வாங்கவில்லை. பிற்காலத்தில் இயக்குனராகி சம்பாதித்த பிறகு முதலில் வாங்கியது கார்தான். கடைசிவரை சைக்கிள் எனக்கு கைகூடாமலே போய்விட்டது.

எனது உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குனர் அஸ்லம். அவரும், சமுத்திரகனியும் எனக்கு பூசாரியாக இருந்தாக சொன்னார்கள். பூசாரியாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை. கடவுள் ஒருவர்தான். அப்படிப் பார்த்தால் பாலாவிடம் நான் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தேன். திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு எப்படி வேண்டுமானோலும் வரும். திண்டுக்கல் தியேட்டரில்தான் என் தயாரிப்பாளர் என்னை இயக்குனராக அறிவித்தார்.

அப்போது அறிமுகமானவவர்தான் இசை அமைப்பாளர்... மேலும் படிக்க

<ul id="pagination-digg"><li class="next"><a href="/movies/news/2012/09/ameer-requests-karnataka-mps-mlas-cauvery-water-2-160643.html">Next »</a></li></ul>

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X