Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நடுவர்களை கவர்ந்த அமீரின் நடனம்.. சொதப்பிய பாவ்னி.. திருத்திக் கொள்வதாக பதில்!
சென்னை : பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவ்னி பங்கேற்று வாராவாரம் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
இந்த வாரமும் இவர்களது நடனம் மிகவும் சிறப்பான கொரியோகிராப்புடன் இருந்தது. குறிப்பாக அமீர் நடுவர்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
ஆனால் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாவ்னி சொதப்பினார். இதை நடுவர்களும் சுட்டிக் காட்டினர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் சென்டர் ஆப் அட்ராக்ஷனாக இருந்தவர்கள் அமீர் -பாவ்னி. இவர்களுக்காக இன்ஸ்டாகிராமில் தனி பக்கமே உள்ளது. அந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் நுழைந்த அமீர், தொடர்ந்து பாவ்னியிடம் காதலை சொல்லி, அவருடைய பதிலுக்காக அவரையே சுற்றி சுற்றி வந்தார்.

அமீர் காதலை ஏற்காத பாவ்னி
ஆனால் அவரது காதலை ஏற்காமல் தற்போது வரை போக்கு காட்டி வருகிறார் பாவ்னி. ஒரு கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகினாலும் இவர்களது காதல் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பேசும்படி இவர்களது நடவடிக்கை இருந்தது. தொடர்ந்து வெளியிடங்களில் சுற்றித் திரிந்தனர். பிறந்தநாள் பார்ட்டிகளில் கலந்துக் கொண்டு கொண்டாடினர்.

ரசிகர்கள் குழப்பம்
இதையெல்லாம் செய்கிறார்கள், ஆனால் காதல் மட்டும் இல்லையா என தொடர்ந்து ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருகிறது இந்த ஜோடி. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2விலும் இந்த ஜோடி இணைந்துள்ளது. டான்ஸ் மாஸ்டரான அமீர், இந்த ஷோவில் மிகவும் சிறப்பான பர்பார்மென்சை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
|
சொதப்பும் பாவ்னி
ஆரம்பத்தில் தயக்கத்துடனேயே ஆடிவந்தார் பாவ்னி. இன்னமும் அமீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த வார ஷோவிலும் இது வெளிப்பட்டது. 3 படத்தின் தீமை வைத்துக் கொண்டு கெத்துக் காட்டினார் அமீர். ஆனால் ஒரு சில காட்சிகளிலேயே நடிக்க வேண்டியிருந்தாலும் அதிலும் சொதப்பினார் பாவ்னி.

சுட்டிக் காட்டிய நடுவர்கள்
இதை நடுவர்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் சுட்டிக் காட்டினர். இதையடுத்து திருத்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சதீஷ் அமீரையும் அவரது செயல்பாட்டையும் கண்டித்தார். அவரது காலில் அடிபட்டு வலியுள்ள நிலையில், இதுபோன்ற கடுமையான ஸ்டெப்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.

அமீரை கண்டித்த நடுவர்கள்
காலின்
வலியுடன்
இதுபோன்ற
ஸ்டெப்சை
செய்வது
அவரது
டெடிகேஷனை
காட்டினாலும்,
கால்வலி
சரியாகும்
வரையில்,
இதுபோன்ற
ரிஸ்க்
எடுக்க
வேண்டாம்
என்றும்
அவர்
குறிப்பிட்டார்.
இதற்கு
சரி
என்று
அமீர்
பதிலளித்தார்.
இந்த
வாரத்தில்
அமீரின்
பர்பார்மென்ஸ்
மிகவும்
சிறப்பாக
அனைவரையும்
கவரும்
வகையிலும்
நெகிழ்ச்சிக்குள்ளாக்கும்
வகையிலும்
அமைந்திருந்தது.

தொடர்ந்து கால் வலி
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே அமீருக்கு காலில் வலி இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவ்னியும் இதை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். ஆனாலும் அமீரின் டெடிகேஷன்தான், அவரை தொடர்ந்து ரசிகர்களின் அன்பை பெற வைக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

அமீர் காதலை ஏற்பாரா பாவ்னி?
அமீரின் காதலை பாவ்னி ஏற்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக ரசிகர்களிடையே காணப்படுகிறது. இருவரும் இணைய வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கடந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் நிறைவேறியது. திருமண சுற்றில் இருவருக்கும் திருமணம் செய்து அழகு பார்த்தது விஜய் டிவி.