இன்னொரு அரசியல் படம்.. இந்த வாட்டி ‘நாற்காலி’ அமீருக்குத் தானாம்!

சென்னை: சர்கார், எல்,கே.ஜி., என்.ஜி.கே., தலைவி வரிசையில் இன்னொரு அரசியல் படமாக நாற்காலி உருவாகவுள்ளது.

வடசென்னையில் ராஜனாக மிரட்டிய இயக்குநர் அமீர், யோகி படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ள நாற்காலி படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகிறது.

சுந்தர். சி நடிப்பில் வரும் டிசம்பர் 6ம் தேதி வரவுள்ள இருட்டு படத்தை இயக்கிய வி.இசட். துரை இந்த படத்தை இயக்குகிறார்.

அரசியல் சீசன்

அரசியல் சீசன்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரே மாதிரியான படங்கள் தொடர்ந்து வெளியாவது வழக்கமாகி வருகிறது. எந்த வகை படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறதோ, அதே குதிரையில் மற்ற இயக்குநர்களும் சவாரி செய்யத் தொடங்குவார்கள். சர்கார், எல்.கே.ஜி., என்.ஜி.கே., என அடுத்தடுத்து அரசியல் படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை தலைவி, தி அயன் லேடி, குயின் என இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இன்னொரு அரசியல் படமாக அமீரின் நாற்காலி உருவாகவுள்ளது.

ரஜினி டைட்டில்?

சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் ரஜினியை இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும், அந்த படத்திற்கு நாற்காலி என்ற டைட்டில் தான் வைக்கப்படும் என்ற வதந்திகள் பரவின. ஆனால், இறுதியாக தர்பார் என்ற டைட்டில் வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாற்காலி டைட்டில் அமீர் படத்துக்கு கிடைத்துள்ளது.

தம்மாத்துண்டு ஆங்கர்

தம்மாத்துண்டு ஆங்கர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வடசென்னை படத்தில், ராஜனாக அசத்தலாக அமீர் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரிகளை அடித்து போட்டு, தம்மாத்துண்டு ஆங்கர் தான்டா அவ்வளவு பெரிய கப்பலையே நிறுத்திகிறது என அவர் பேசும் பஞ்ச் வசனம் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. அண்ட்ரியாவுடன் அமீர் பாடும் என்னடி மாயாவி பாடலும் வடசென்னை படத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.

துரை

துரை

தல அஜித்தின் முகவரி படத்தை இயக்கியவர் வி.இசட். துரை. சிம்புவுக்கு தொட்டி ஜெயா என்ற அருமையான படத்தையும் இயக்கியிருந்தார். ஷியாமின் 6 கேண்டில்ஸ் படமும் இவரது இயக்கத்தில் இருந்து விழுந்த முத்து தான். நல்ல இயக்குநராக இருந்தாலும், மாஸ் ஹீரோக்களுடன் தொடர்ந்து இவரால் படம் பண்ண முடியவில்லை. தற்போது, சுந்தர்.சி நடிப்பில் பேய் படமான இருட்டு படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக, அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Read more about: ameer அமீர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X