Ameer: "பருத்திவீரன் சர்ச்சை... கார்த்தி அமைதியா இருக்குறத ஏத்துக்க முடியல..” சமுத்திரகனி ஆதங்கம்!

சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி.
முதல் படமே சூப்பர் ஹிட்டானதால், கார்த்தியின் சினிமா கேரியர் உச்சம் தொட்டது.
இந்நிலையில், பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் அமீருக்கு ஆதரவாகவும் கார்த்தி, ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தும் சமுத்திரகனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ameer: Samuthirakani voice again for Ameer in Paruthiveeran issues

அமீருக்காக களமிறங்கிய சமுத்திரகனி:கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படம் கோலிவுட்டின் கல்ட் கிளாசிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பருத்திவீரன் பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீர் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கியுள்ளார் அமீர்.

ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் என அமீர் கூறியிருந்தார். இதற்கு விளக்கம் கொடுத்த ஞானவேல்ராஜா, பருத்திவீரனை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 2.75 கோடி பட்ஜெட்டில் முடிப்பதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை அமீர் செலவு செய்தார். அதுமட்டும் இல்லாமல் பொய்யான கணக்கு எழுதி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மெளனம் பேசியதே பட தயாரிப்பாளர் கணேஷ் ரகு, அமீருக்கு ஆதரவாக பேட்டிக் கொடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சசிகுமாரும் அமீருக்கு ஆதரவுத் தெரிவித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது நடிகர் சமுத்திரகனியும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், கார்த்தி, ஞானவேல்ராஜா இருவருக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமுத்திரகனி வெளியிட்டுள்ள அறிக்கையில், திரு ஞானவேல்ராஜாவுக்கு என குறிப்பிட்டுள்ள சமுத்திரகனி, அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ. தப்பு தப்பா பேசிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன் சொல்றேன்னா... அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான். எல்லா பிரச்சினையும் எனக்குத் தெரியும்.

ஆறுமாசம் பருத்திவீரன் படப்பிடிப்பிலேயே இருந்துருக்கேன். ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பார்த்தது இல்ல. நான் தான் தயாரிப்பாளர் நான் தான் தயாரிப்பாளர்ன்னு பேசிட்டே இருக்கீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்திய ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விசுவாசமும் இல்லாம பேசி இருக்கீங்க ப்ரதர். தப்பில்லையா? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்? பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு அவங்களே பேசிக்குவாங்க... அவங்களே தீத்துக்குவாங்க அப்படின்னு தான் இருந்தேன்.

ஆனா இந்தமுறை அப்படி இருக்க முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கு. அமீர் அண்ணன் இந்தப் படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார்... எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார்ன்னு எனக்கு தான் தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க. என்னால தயாரிக்க முடியாது... பணம் இல்ல அப்படின்னு. சகோதரர் சூர்யா வந்து "படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா" அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டார்.

அதுக்குப்பிறகு அந்தப் படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட சொந்தகாரங்க, நண்பர்கள் இப்படி அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம் இப்டி வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்தப் படத்துக்கு. கிட்டத்தட்ட அம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்தப் படத்தை எடுத்து முடிச்சோம். ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டைய போட்டுக்கிட்டீங்க. உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்ன்னு சொல்லுங்க.? தயாரிப்பாளர் பதவிய அமீர் அண்ணன் உங்களுக்கு விட்டுக் கொடுத்தார்.

அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்குறத தான் என்னால ஏத்துக்க முடியல. ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர்.. "எதுக்கு அப்படியே உட்டுட வேண்டியதுதான... நிறுத்துங்க படத்தை அப்படின்னு சொன்னார்." அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னார் தெரியுமா..?

"ஆரம்பிச்சுட்டோம் கார்த்தியோட எதிர்காலம் இது... அதுமட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சுட்டு கார்த்தி கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதுலயே இருக்கு. நான் இவங்களுக்காக ஏதும் செய்யலங்க... அந்த பெரிய மனுசனுக்காகத்தான் செய்றேன்." சொல்லி செஞ்சார். அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தா இந்தப் படம் வந்துருக்குமா? ஒரு ஹீரோ வெளில வந்துருப்பாரா? என்ன பேச்சு பேசுறீங்க? ஆனா, அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுசனைதான் எல்லாருமா சேர்ந்து.

இப்படி அம்பது அறுபது பேர்ட்ட வாங்குன பணத்துக்காக தான் நீங்கெல்லாம் சேர்ந்து உக்காந்து கணக்கு கேட்டீங்க. எனக்கே தெரியல... எத்தன பேர்ட்ட போய்ட்டு வாங்கிட்டு வந்தேன்னு... யார் யார் எவ்ளோ கொடுத்தாங்கன்னு. சொன்ன வார்த்தைய காப்பாத்தணும்ன்னு பல பேர்கிட்ட கையேந்தி அந்த படத்தை முடிச்சார் அமீர் அண்ணன். அதுக்கு ஆயிரம் கோடி இல்ல, லட்சம் கோடி கொடுத்தாலும் ஈடாகாதுங்க.

நீங்கெல்லாம் எதோ ஒன்றரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல். செலவு பண்ணது அதுக்கும் மேல.. அதெல்லாம் பாவம். கணக்கிலயே இல்ல, அமீர் அண்ணனோட பணம் அது. இப்ப நான் சொன்னது எல்லாம் ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு, தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும். இந்தமாறி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கோங்க... அதுதான் எல்லோருக்கும் நல்லது என காட்டமாக குறிப்பிட்டுள்ளார் சமுத்திரகனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X