Jayalalithaa - ஜெயலலிதாவுக்கு மஞ்சள் பொக்கே.. அவரின் பேச்சையே இடைமறித்த அமீர்.. வாயடைத்துபோன அதிகாரிகள்

சென்னை: Ameer On Jayalalithaa (ஜெயலலிதா பற்றி அமீர்) ஜெயலலிதாவை சந்தித்தபோது நடந்தவற்றை இயக்குநர் அமீர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

பாலாவிடம் உதவி இயக்குநராக சேது, நந்தா ஆகிய படங்களில் வேலை செய்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யாவை புதுவிதமாக காண்பித்து காதல் ஜானரில் அந்தப் படத்தை இயக்கி வெற்றி பெற்றார் அமீர். அதனையடுத்து அவர் இயக்கிய ராம் படத்தின் மூலம் அவரே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை.

Ameer Shares his Experience About Meeting With Jayalalithaa

பருத்திவீரன்: மூன்றாவது படமாக பருத்திவீரனை இயக்கினார். கார்த்தியின் முதல் படமான அது இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. கார்த்தியுடன் ப்ரியாமணி,சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகி ப்ரியாமணிக்கு தேசிய விருதையும் கார்த்திக்கு சிறந்த அறிமுகத்தையும் பெற்று கொடுத்தது.

ட்ரெண்ட் செட்டர்: அந்தப் படம் மிகப்பெரிய ட்ரெண்டை செட் செய்தது. அந்தப் படத்திலிருந்து அமீர் மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக மாறினார். மேலும் சிவாஜிக்கு பிறகு அறிமுக படம் மெகா ஹிட்டானது என்றால் அது பருத்திவீரனால் கார்த்திக்கு நடந்தது. அந்தப் படத்துக்கு பிறகு அமீர் இயக்கிய, தயாரித்த படங்கள் சரியாக போகவில்லை. இதற்கிடையே பருத்திவீரன் படம் தொடர்பான பஞ்சாயத்தும் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Ameer Shares his Experience About Meeting With Jayalalithaa

நடிகர்: அவர் தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடசென்னையில் அவர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரம் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர். மேலும் அவரே தயாரித்து நடித்திருக்கும் மாயவலை படமும் ரிலீஸாகவிருக்கிறது.

அமீர் பேட்டி: அமீர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் மட்டுமின்றி ஃபெப்சியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில் அவர் ஃபெப்சி தலைவராக இருந்தபோது ஜெயலலிதாவை சந்தித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஃபெப்சி தலைவராக நான் இருந்தபோது ஜெயலலிதாவை சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவரை சந்திக்க சென்றேன்.

மஞ்சள் பொக்கே: நானும் 9 நிர்வாகிகளும் தலைமை செயலகத்துக்கு சென்றோம். அப்போது மஞ்சள் நிற பொக்கேவை வாங்கி சென்றேன். அதை பார்த்த ஜெயலலிதாவின் பி.ஏ. பூங்குன்றன், 'ஏங்க மஞ்சள் நிற பொக்கேவை வாங்கிட்டு வந்துருக்கீங்க. வேணும்னே பண்றீங்களானு கேட்டுட்டு அவசர அவசரமாக உள்ளே சென்று வேறு கலர் பொக்கேவை கொண்டு வந்து கொடுத்து இதை அம்மாவிடம் (கலைஞர் கருணாநிதி மஞ்சள் நிற சால்வை அணிந்ததால் அந்த நிறம் மீது ஜெயலலிதாவுக்கு ஒரு வெறுப்பு என்று கூறப்படுவதுண்டு) கொடுங்கள் என சொன்னார்.

ஜெ பேச்சை இடைமறித்த அமீர்: பிறகு உள்ளே சென்றோம். மொத்தம் 7 நிமிடங்கள்தான் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் பேசியதை கேட்டு அந்த மீட்டிங் 30லிருந்து 40 நிமிடங்கள்வரை நீண்டது. அந்த சமயத்தில் அவர் பேசுகையில் இரண்டு முறை நான், 'மேடம் ஒரு நிமிஷம் இருங்க' என்று இடைமறித்தேன். அது அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல விஷயங்கள் பேசினோம். பிறகு அந்த மீட்டிங் நன்றாக இருந்ததாகவும், ஜெயலலிதாவும் மகிழ்ச்சியாக இருந்தார் என்றும் அதிகாரிகள் சொன்னார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X