மனைவி - மகளை விரட்டிவிட்டுவிட்டு.. மகளிர் தினவிழா தேவையா? விஜய்யை கடுமையாக விமர்சித்த அமீர்
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7ஆம் தேதி மகளிர் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இன்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கவுள்ளார். இந்த கொண்டாடம் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதால், தவெக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் தவெக சார்பில் நடைபெறும் இந்த மகளிர் தின கொண்டாட்டம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான அமீர் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்துள்ள விவாகரத்து மனுவில் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு உள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் விஜய் தன்னை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தினார், வீட்டில் எனக்கான உரிமைகளைத் தடுத்தார் என்று எல்லாம் குறிப்பிட்டிருந்தார். இப்படி இருக்கையில் விஜய்யின் தவெக சார்பில் நடைபெறும் இந்த மகளிர் தின கொண்டாட்டம் தொடர்பாக அமீர் மட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அரசியல் தெளிவு: இயக்குநர் அமீரைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவைத் தெரிவித்துவந்துள்ளார். அதே நேரத்தில் அவர்கள் தரப்பில் விமர்சனமும் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை நேரடியாக விமர்சிக்கும் திரைக்கலைஞன் மட்டுமல்லாது, தெளிவான அரசியல் புரிதல் கொண்டவரும் கூட. இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகளும் அவரது கட்சி நடவடிக்கைகளும் பெரும் பேசுபொருளாகவே மாறி வருகிறது.
காட்டமான விமர்சனம்: அதுவும் சங்கீதா அளித்த விவாகரத்து மனு வெளியான பின்னர் நடிகை த்ரிஷாவை அழைத்துக் கொண்டு திருமண விழாவில் கலந்து கொண்டதும் பெரும் பேசு பொருளாக மாறியது. இப்படி இருக்கையில், அவரது கட்சி சார்பில் நடைபெறவுள்ள மகளிர் தின கொண்டாட்டத்தை இயக்குநர் அமீர் கடுமையாக விமர்சித்துள்ளார். " மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி" என்ற அவரது வாட்ஸ் ஆப் பதிவு பெரும் கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











