Ameer: “அமீரை அசிங்கப்படுத்தினால் சூர்யாவின் கால்ஷீட்..” பிரபலம் வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்!
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் குரல் கொடுத்தனர். இந்நிலையில், அமீரை அசிங்கப்படுத்தினால் சூர்யாவின் கால்ஷீட் கிடைக்கும் என டீல் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமீரை அசிங்கப்படுத்தினால் சூர்யா கால்ஷீட்
கடந்த சில வாரங்களாகவே அமீரின் பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தை அமீர் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கி தயாரித்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் பருத்திவீரன் உரிமையை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார் ஞானவேல்ராஜா.
இதனால், அமீர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 16 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த அனைத்து பிரச்சினைகளும் கார்த்தியின் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவுக்குப் பின்னரே ஓரளவு தெரியவந்தது. அதன் பின்னர் அமீர், ஞானவேல்ராஜா இருவரும் கொடுத்த பேட்டிகளும், வெளியிட்ட அறிக்கைகளும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் அமீர் குறித்து ஞானவேல்ராஜா ஆணவமாக பேசியது சர்ச்சையானது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் அமீருக்கு சப்போர்ட்டாக சசிகுமார், சமுத்திரகனி, பாரதிராஜா, கரு பழனியப்பன், சேரன், சினேகன், பொன்வண்ணன், அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். இதனால், ஒருகட்டத்தில் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அப்போதும் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சமீபத்தில் பருத்திவீரன் சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசியதும் வைரலானது. இதனையடுத்து இயக்குநர் அமீரும் சிவசக்தி பாண்டியனின் பேட்டியை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டார். இன்னொருபக்கம் வாடிவாசல் படத்தில் அமீர் கண்டிப்பாக நடிப்பார் என வெற்றிமாறன் உறுதியாக சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல் படத்தில் அமீர் நடித்தால், சூர்யா அதிலிருந்து விலகிவிடுவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும், சூர்யா, வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் தான் வாடிவாசல் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், பருத்திவீரன் சர்ச்சையில் அமீரை பேசவிடாமல் அமைதிப்படுத்த வேண்டும் என சூர்யா, கார்த்தி தரப்பு பிளான் செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், சூர்யா அமீரை பழிவாங்கும் நோக்கத்தில் இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குநர் அமீரை அசிங்கப்படுத்தி அமைதியாக்கினால் சூர்யாவின் கால்ஷீட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதா? சிலர் தீயாய் இறங்கி வேலை செய்றாங்களே..." என கொளுத்திப் போட்டுள்ளார். பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா, கார்த்தி இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











