திருப்புவனம் அஜித் மரணம்.. அதை விஜய்யிடம் சென்றுதான் கேட்க வேண்டும்.. அமீர் ஓபன் டாக்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் அடுத்த வருட தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். சினிமாவில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதே அளவு தாக்கத்தை அவர் அரசியலிலும் செலுத்துவார் என்று அவரது தொண்டர்களும், ரசிகர்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் குறித்து இயக்குநர் அமீர் பேசியிருக்கும் விசயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர் அதுகுறித்து எந்த சிக்னலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திடீரென கட்சி ஆரம்பிப்பதாக ட்விட்டரில் அறிவித்தார். அறிவிப்பை வெளியிட்ட கையோடு கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் தங்கள் கட்சியின் கொள்கை எதிரி திமுகவும், பாஜகவும்தான் என்று ஓபனாக பேசினார்.
விஜய்யை விளாசும் திமுகவினர்: விஜய் அப்படி சொன்னதிலிருந்து அவரை திமுகவினர் கடுமையாக சாட தொடங்கியிருக்கிறார்கள். பனையூர் அலுவலகத்திலிருந்து கொண்டே விஜய் அரசியல் செய்கிறார்; அவர் பாஜகவின் இன்னொரு வடிவம் என்று ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள். அதற்கு தவெகவினரும் தங்களால் முடிந்த பதிலடியை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அஜித்குமார்: சூழல் இப்படி இருக்க திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதாவது நிகிதா என்ற பெண் அஜித் தன்னுடைய நகையை திருடிவிட்டதாக; அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் தனது உறவினரிடம் சொல்ல; அவர் சில காவல் தூறையினரிடம் சொல்ல; அவர்கள் வந்து விசாரணை எதுவுமே செய்யாமல் அஜித்தை அடித்து சித்ரவதை செய்தார்கள்.
மரணமடைந்த அஜித்: அவர்களின் சித்ரவதையும், தாக்குதலும் அஜித்தின் உயிரை பறித்துவிட்டது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு உடனடியாக சிபிஐக்கும் மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித்தின் வீட்டுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அமீர் பேட்டி: அதுகுறித்து இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேர்தல் நெருங்கிவிட்டது எப்போது வெளியே வருவீர்கள் என்று விஜய்யிடம்தான் சென்று கேட்க வேண்டும். தேர்தல் வந்துவிட்டது வெளியே வாருங்கள் என்று அவரிடம்தான் சொல்ல வேண்டும். அவர்தான் திருப்புவனத்துக்கு சென்றிருக்கிறாரே. பத்திரிகையாளர்கள் அங்கே சென்று அவரை பிடித்து கேட்டிருக்க வேண்டியதுதானே. என்னிடம் கேட்கிறீர்கள். நான் என்ன அவருடைய மேனேஜரா?"
அஜித்குமார் மரணத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏன் எடுக்கவில்லை என்று கேட்கலாம். சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது அரசு பக்கம் நிற்க வேண்டும். நான் ஒன்றும் திமுககாரர் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











