Ameer - விஜய்யிடம் கதை சொன்ன அமீர்.. தளபதி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?.. விவரம் உள்ளே

சென்னை: Ameer (அமீர்) விஜய்யிடம் இயக்குநர் அமீர் கதை சொன்ன விஷயம் தற்போது தெரியவந்திருக்கிறது.

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் ராம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படமும் சரியாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ameer Told Story to Actor Vijay Here is the details

பருத்திவீரன்: இப்படிப்பட்ட சூழலில் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர். அந்தப் படம்தான் கார்த்திக்கு முதல் படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பருத்திவீரன் திரைப்படம் எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் கிராமத்து கதைகளுக்கான ட்ரெண்டை மீண்டும் செட் செய்தது அந்தப் படம்தான்.

பிரச்னை: பருத்திவீரன் திரைப்படம் கார்த்தி மற்றும் அமீர் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதேபோல் அந்தப் படம்தான் சூர்யா, கார்த்தி vs அமீர் என்ற நிலையையும் உருவாக்கியது. அந்தப் படத்தின்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக இன்றுவரை சூர்யாவும் அமீரும் பேசிக்கொள்வதில்லை. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன.

மாயவலை: இதற்கிடையே அவர் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ராஜன் என்ற கேரக்டரை ஏற்றிருந்த அவர் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்திருந்தார். இந்த சூழலில் அமீர் மாயவலை என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.

விஜய்யிடம் கதை: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யிடம் கதை கூறிய அனுபவத்தை அமீர் பகிர்ந்திருந்தார். அவர் அந்தப் பேட்டியில், “விஜய்யிடம் கண்ணபிரான் மற்றும் ஆதிபகவான் என இரண்டு கதைகளை சொன்னேன். அவருக்கு இரண்டு கதைகளுமே பிடித்துவிட்டன. இருந்தாலும் ஒரு குழப்பத்தில் தனக்கு எந்த கதை செட் ஆகும் என என்னிடம் கேட்டார். நான் அவரிடம் உங்களுக்கு கண்ணபிரான் செட் ஆகும் என சொன்னேன்.

உடனே அவர், சரி தயாரிப்பாளரிடமும் கதையை சொல்லிவிடுங்கள் என்றார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. அதனையடுத்துதான் ஆதிபகவான் படத்தை இயக்கினேன். கண்ணபிரான் கதையை சூர்யாவை வைத்து இயக்கலாம் என்றும் நினைத்தேன். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை” என்றார்.

பருத்திவீரன் பஞ்சாயத்து: அமீருக்கும் சூர்யா தரப்புக்கும் நடந்த பருத்திவீரன் தொடர்பான பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அமீர் தன்னிடம் பண விஷயத்தில் ஏமாற்றிவிட்டார் என ஞானவேல் கூறியிருந்தார். அதற்கு அமீர் தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதனையடுத்து அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன் உள்ளிட்டோர் ஆதரவாக களமிறங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X