twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிரடி அரசியலில் அமீர், வேற லெவல் பாலிட்டிக்ஸில் விஜய்சேதுபதி.. ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள்!

    By
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

    Recommended Video

    Money Heist | Tamil Cast | Netflix | Series | Review | The Professor

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அரசியல் நையாண்டி படங்கள் அதிகமாக வெளியாயின. சிரியசான அரசியல் படங்களும் வெளியாகி வந்தன.

    அடுத்தடுத்து வந்த இயக்குனர்கள், காதல், காமெடி, பேய்ப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், அரசியல் படங்கள் அதிகமாக வெளிவரவில்லை.

     ஆள விடுங்கடா சாமி... என் பிறந்த நாள் அடுத்த மாசம்..கடுப்பான பிரபல நடிகை ! ஆள விடுங்கடா சாமி... என் பிறந்த நாள் அடுத்த மாசம்..கடுப்பான பிரபல நடிகை !

    அரசியல் படங்கள்

    அரசியல் படங்கள்

    இந்நிலையில் இப்போது ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள் தமிழ் சினிமாவில் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று நாற்காலி. அமீர் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், அடுத்து, ராம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், ஜெயம் ரவி நடித்த அதி பகவன் உட்பட சில படங்களை இயக்கினார்.

    அரசியல்வாதி அமீர்

    அரசியல்வாதி அமீர்

    பின்னர் சுப்ரமணிய சிவா இயக்கிய, யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, சில படங்களில் நடித்த அமீர், கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நாற்காலி படத்தில் நடிக்கிறார். அமைதிப்படை படத்துக்குப் பிறகு உருவாகும் முழுமையான அரசியல் படம். பக்காவான அரசியல்வாதியாக அமீர் நடிக்கிறார்.

    வித்யாசாகர் இசை

    வித்யாசாகர் இசை

    படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இவர், அஜித்தின் முகவரி, விக்ரமின் காதல் சடுகுடு, ஷாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள், சுந்தர்.சி நடித்த இருட்டு உட்பட சில படங்களை இயக்கியவர். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார். இதை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார்.

    துக்ளக் தர்பார்

    துக்ளக் தர்பார்

    இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படமும் அரசியலை மையப்படுத்திய கதையை கொண்டது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இந்தப் படத்தில் பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் 50 சதவிகிதம் முடிந்துள்ளது. இதுவும் பக்காவான அரசியல் படம்தானாம்.

    மாஸ்டர் இணை தயாரிப்பாளர்

    மாஸ்டர் இணை தயாரிப்பாளர்

    நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி இதில் இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இதை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள் உருவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Ameer's Narkali and Vijay sethupathi's Tughlaq darbar both are political genre films evolving at the same time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X