'அது மல்லாங்கிணறு மங்காத்தா!'
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் நடிக்கவில்லை என்பது பழைய செய்தி. புதிய செய்தி, அவர் மல்லாங்கிணறு மங்காத்தா என்ற படத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தப் படத்தை பாரதிராஜாவே இயக்க உள்ளாராம்.
பெப்சி பிரச்சினை காரணமாகவே அமீரை அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து அமீரை நீக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், பாரதிராஜா தரப்பில் புதிய விளக்கம் தரப்பட்டுள்ளது.
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர், இனியா வரும் காட்சிகள் அன்னக்கொடி படக் கதையோடு ஒட்டாமல் இருந்ததால், அந்தப் பகுதியை மட்டும் தனி படமாகவே எடுக்க பாரதி ராஜா விரும்பினாராம்.
எனவே அன்னக் கொடியும் கொடி வீரனும் கதையை முதலில் எடுத்துவிட்டு, அதற்கடுத்து மல்லாங்கிணறு மங்காத்தா என்ற தலைப்பில் புதிய படத்தை எடுக்கப் போவதாக பாரதிராஜா கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் நாயகனாகவும் இனியா நாயகியாகவும் நடிக்கின்றனர், என்கிறார்கள்.
இதாவது உண்மையா? நடக்குமா? எல்லாம் அந்த வீரப்ப அய்யனாருக்கே வெளிச்சம்!
Comments


Click it and Unblock the Notifications
