ஆரம்பமே அசத்தல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வெற்றி கூட்டணி.. அப்போ தரமான சம்பவம் இருக்கு !

சென்னை : அமீர், வெற்றிமாறன் இணையும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படம் நிச்சயம் பட்டையை கிளப்பும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த தகவலை அமீர் சோஷியல் மீடியாவில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அமீர்

அமீர்

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவன் என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்திற்கு பிறகு அமீர் எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார்.

ராஜனாக மிரட்டிய அமீர்

ராஜனாக மிரட்டிய அமீர்

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடித்த ராஜன் என்ற கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் அவரின் எதார்த்த பேச்சு பலரை கவர்ந்தது.

இறைவன் மிகப் பெரியவன்

இறைவன் மிகப் பெரியவன்

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அமீர் இணையக்கூடிய புதிய படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாடலை உருவாக்கி விட்டதாக அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இசை இளவல்

இசை இளவல்

அதில், மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு, 22.02.2022 இந்த சிறப்பான நாளில் எனது இயக்கத்தில் உருவாகும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்திற்கான முதல் பாடலை "இசை இளவல்" யுவன் ஷங்கர் ராஜா அவர்களுடன் சேர்ந்து கம்போஸ் செய்து முடித்திருக்கிறேன் என்பதை மகிழ்வோடு தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X